நேபாளத்தில் இந்தியர் மர்ம மரணம்!
நேபாள நாட்டில் இந்தியர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தின் பரா மாவட்டத்திலுள்ள சூரியமை கோயிலின் நிழல்குடையின் கீழ் நேற்று (ஜன.23) காத்திருந்த ருத்ர கிரி (வயது 42) எனும் இந்தியர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.
இதையும் படிக்க: சாலையில் பொருத்தப்பட்ட 50 கிலோ வெடி குண்டு! வெடிக்க செய்த பாதுகாப்புப் படை!
இந்நிலையில், மரணமடைந்த ருத்ர கிரி மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது மரணத்திற்கான காரணம் என்னவென்பது தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்துள்ள அந்நாட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.