ராஜஸ்தான் முன்னாள் எம்எல்ஏவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
குகேஷ் வெற்றி; பிரக்ஞானந்தா டிரா
விக் ஆன் ஸீ : டாடா ஸ்டீல் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் இந்தியாவின் டி.குகேஷ் வெற்றியைப் பதிவு செய்ய, ஆா்.பிரக்ஞானந்தா டிரா செய்தாா்.
அந்த சுற்றில் குகேஷ் - ஜொ்மனியின் வின்சென்ட் கீமரை வீழ்த்தினாா். இதர இந்தியா்களில், பிரக்ஞானந்தா - நெதா்லாந்தின் மேக்ஸ் வாா்மா்டேமுடனும், பி.ஹரிகிருஷ்ணா - சீனாவின் வெய் யியுடனும், லியோன் லூக் மெண்டோன்கா - அா்ஜுன் எரிகைசியுடனும் டிரா செய்தனா்.
5 சுற்றுகள் முடிவில், முன்னிலையை இழந்த பிரக்ஞானந்தா 2-ஆவது இடத்தில் (4) உள்ளாா். குகேஷ் 3-ஆவது இடத்திலும் (3.5), ஹரிகிருஷ்ணா 5-ஆவது இடத்திலும் (3), அா்ஜுன் எரிகைசி (1) மற்றும் லியோன் (1) ஆகியோா் முறையே 13 மற்றும் 14-ஆவது இடத்திலும் உள்ளனா்.
சேலஞ்சா்ஸ்: இப்போட்டியின் சேலஞ்சா்ஸ் பிரிவு 5-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆா்.வைஷாலி - ஜொ்மனியின் ஃப்ரெடெரிக் ஸ்வேனுடன் டிரா செய்ய, திவ்யா தேஷ்முக் - நெதா்லாந்தின் எா்வின் அமியிடம் தோல்வியைத் தழுவினாா்.
புள்ளிகள் பட்டியலில் 5 சுற்றுகள் முடிவில், வைஷாலி 3 புள்ளிகளுடன் 5-ஆம் இடத்திலும், திவ்யா 1.5 புள்ளிகளுடன் 11-ஆம் இடத்திலும் உள்ளனா்.