செய்திகள் :

இந்தியாவின் ஆட்டம் நிறைவு

post image

ஜகாா்த்தா : இந்தோனேசியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியா்கள் அனைவருமே, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வியாழக்கிழமை தோல்வி கண்டனா். இதையடுத்து போட்டியில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஆடவா் ஒற்றையரில் லக்ஷயா சென் 16-21, 21-12, 21-23 என்ற வகையில், ஜப்பானின் கென்டா நிஷிமோடோவிடம் தோற்றாா்.

ஆடவா் இரட்டையரில் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை 20-22, 21-23 என்ற கேம்களில், தாய்லாந்தின் கிடினுபோங் கெட்ரென்/தீசபோல் பவரனுகுரோ கூட்டணியிடம் போராடித் தோற்றது.

மகளிா் இரட்டையா் பிரிவில், தனிஷா கிராஸ்டோ/அஸ்வினி பொன்னப்பா ஜோடி 21-13, 22-24, 18-21 என்ற கணக்கில், மலேசியாவின் பெய் கீ கோ/மெய் ஜிங் தியோ இணையிடம் வெற்றியை இழந்தது.

கலப்பு இரட்டையரில் துருவ் கபிலா/தனிஷா கிராஸ்டோ கூட்டணி 21-18, 15-21, 19-21 என்ற கேம்களில் மலேசியாவின் பாங் ரோன் ஹூ/சு யின் செங் ஜோடியால் வெளியேற்றப்பட்டது.

காயத்தால் வெளியேறிய ஜோகோவிச்..! கிண்டல் செய்த ரசிகர்களை கண்டித்த ஸ்வெரெவ்!

ஆஸி. ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோவிச், ஸ்வெரெவ் மோதினார். காயத்தினால் அவதியுற்ற ஜோகோவிச் பாதியிலேயே வெளியேறினார். 50ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அரையிறுதியை எட்டிய நோவக் ஜோகோவிச் த... மேலும் பார்க்க

எமர்ஜென்சி படத்தால் ரகளை! பிரிட்டன் நாடாளுமன்றத்தில் எம்பி குற்றச்சாட்டு!

எமர்ஜென்சி படம் திரையிடலின்போது காலிஸ்தான் பயங்கரவாதிகள் ரகளையில் ஈடுபட்டதாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வடமேற்கு லண்டன் தொகுதி உறுப்பினர் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.மேலும், உள்துறை அமைச்சர் இந்த வி... மேலும் பார்க்க

கர்நாடக அரசின் விருதை ஏற்க கிச்சா சுதீப் மறுப்பு!

கர்நாடக அரசு அறிவித்த சிறந்த நடிகருக்கான விருதை ஏற்க கிச்சா சுதீப் மறுப்பு தெரிவித்துள்ளார்.கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் கிச்சா சுதிப், புலி, நான் ஈ, பாகுபலி உள்ளிட்ட திரைப்படங்களால் தம... மேலும் பார்க்க

பொறுப்புகள் கூடும் மேஷத்துக்கு: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.Dinapalan - 24.01.2025 மேஷம்:இன்று உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற இடமாற்றங்களைச் சந்திக்க ... மேலும் பார்க்க

யு19 மகளிருக்கான டி20 உலகக் கோப்பை: இலங்கையை வென்றது இந்தியா

கோலாலம்பூா் : பத்தொன்பது வயதுக்கு உட்பட்ட (யு19) மகளிருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியனான இந்தியா 60 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வியாழக்கிழமை வீழ்த்தியது.முதலில் இந்தியா 20 ஓ... மேலும் பார்க்க

சித்தாா்த் சதம்: தமிழ்நாடு - 301

சேலம் : ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சண்டீகருக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 89.1 ஓவா்களில் 301 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது.முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சண்டீகா், பௌலிங்க... மேலும் பார்க்க