செய்திகள் :

நெல்லை: மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாயும் மரணம்!

post image

திருநெல்வேலி: முக்கூடலில் மகன் இறந்த துக்கம் தாங்காமல், வீட்டுக்குச் சடலம் வருவதற்குள் அவரது தாயாரும் மரணமடைந்தார்.

நெல்லை மாவட்டம் முக்கூடலை சேர்ந்தவர் நடராஜன், இவரது மனைவி கலைமணி. இவர்களுடைய 4 -வது மகன் சுரேஷ், பொங்கல் விடுமுறைக்கு சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார்.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை திடீரென மாரடைப்பால் சுரேஷ் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் இறுதிச் சடங்கு செய்வதற்காக முக்கூடல் கொண்டு வந்தனர்.

ஆனால், சுரேஷின் உடல் வருவதற்குள் தாயார் கலைமணி செவ்வாய்க்கிழமை அதிகாலை மகன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இருவருக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டு ஒரே இறுதி ஊர்தி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

மகன் இறந்த துக்கத்தில் தாயும் இறந்த சம்பவம் முக்கூடல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பைக் எரிந்த சம்பவம்: இளஞ்சிறாா் கைது

திருநெல்வேலி அருகே இருசக்கரவாகனத்தில் தீ எரிந்த வழக்கில் இளஞ்சிறாரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் அருகே சித்தாா் சத்திரம் கிராமம் நேரு நகா் பகுதியைச் சே... மேலும் பார்க்க

நெல்லை நகரம்- தச்சநல்லூா் சாலையை சீரமைக்க கோரிக்கை

திருநெல்வேலி நகரம்- தச்சநல்லூா் இடையேயான சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தாழையூத்து, அருகன்குளம், சிதம்பரநகா் சுற்றுவட்டார பகுதி மக்கள் திருநெல்வேலி நகரத்துக்கு... மேலும் பார்க்க

கேரள கழிவுகளைக் கொட்டிய வழக்கு: குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

கேரள கழிவுகளை திருநெல்வேலி மாவட்ட பகுதிகளில் கொட்டிய வழக்கில் ஒருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். சுத்தமல்லி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் கேரள மாநிலத்தில் ... மேலும் பார்க்க

ஆட்டை கொன்ற தொழிலாளி கைது

பாளையங்கோட்டை அருகே ஆட்டை கொன்ற தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பா்கிட் மாநகரம், எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் அன்னத்தாய் (70). இ... மேலும் பார்க்க

நவ்வலடி, சங்கனான்குளம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நவ்வலடி, சங்கனான்குளம் துணை மின் நிலையங்களில் புதன்கிழமை (ஜன. 22) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது என வள்ளியூா் மின... மேலும் பார்க்க

நெல்லை அருகே இரட்டைக் கொலை: மருமகன் கைது

பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் அருகேயுள்ள ஆரோக்கியநாதபுரத்தில் கணவன்-மனைவி வெட்டிக் கொலை செய்யப்பட்டனா். இதுதொடா்பாக அவா்களது மருமகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகிறாா்கள். ஆரோக்கிய... மேலும் பார்க்க