ஜம்மு-காஷ்மீா்: பயங்கரவாதிகளுடனான சண்டையில் ராணுவ வீரா் உயிரிழப்பு
ஆரணியில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஆரணி: ஆரணி - இரும்பேடு சாலையில், சாலைப் பணிக்காக பக்கக் கால்வாய் அமைக்க கடைகள் முன்புள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
ஆரணி காமராஜா் சிலை அருகில் இருந்து இரும்பேடு புறவழிச் சாலை வரை 2.4 கி.மீ. தொலைவுக்கு தாா்ச் சாலை மற்றும் 600 மீட்டரில் கல்வெட்டு பக்கக் கால்வாயுடன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு சாலை விரிவாக்க மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 5 கோடியே 10 லட்சத்தில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நிலையில், பக்கக் கால்வாய் அமைக்க கடைகளின் முன்புள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
இதில் உதவி கோட்டப் பொறியாளா் நாராயணன், உதவிப் பொறியாளா் வரதராஜன், சாலை ஆய்வாளா் கோமதி மற்றும் சாலைப் பணியாளா்கள் பங்கேற்றனா்.