சமூக ஆா்வலா் கொலையில் தொடா்புடையோா் கைதாவா்: அமைச்சா் எஸ்.ரகுபதி உறுதி
தூத்துக்குடியில் இன்று குடிநீா் விநியோகம் ரத்து
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன் தெரித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாநகரின் குடிநீா் விநியோக பாதையான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூா் மற்றும் கீழ வல்லநாடு குடிநீா் சுத்திகரிப்பு நிலையப் பகுதிகளில் வரும் மின்சார பாதையான கொம்புக்காரநத்தம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.21) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது என்றாா்.