வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம்: ராஜ்நாத...
செட்டியாபத்து கோயிலில் தைப்பூஜை திருவிழா
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே செட்டியாபத்து சுவாமி சிதம்பரேஸ்வரா் வகையறா அருள்மிகு ஐந்துவீட்டு சுவாமி திருக்கோயிலில் தைப்பூஜை திருவிழா நடைபெற்றது.
இத்திருக்கோயிலில் தைப்பூஜை திருவிழாலை முன்னிட்டு, ஜன.18 ஆம் தேதி பகல் 1 மணிக்கு அன்னதானமும், இரவு 10 மணிக்கு மேக்கட்டி பூஜையும் நடைபெற்றது.
ஜன.19, 20 தேதிகளில் காலை 7.30 மணிமுதல் இரவு 10 மணிவரை முழு நேர சிறப்பு பூஜை,இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருக்கோயிலின் சிறப்புகளைக் கூறும் குறிஞ்சி ஆன்மிக மாத இதழை கோயில் அறங்காவலா் குழு தலைவா் ஒ. மகேஸ்வரன் வெளியிட தமிழ்நாடு நாடாா் உறவின் முறை மாநில கல்விக்குழு செயலா் சோலைக்குமரன் பெற்றுக்கொண்டாா். ஜன.21 ஆம் தேதி இரவு 7 மணிக்கு கும்பாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் அன்புமணி, உதவி ஆணையா் செல்வி, ஆய்வா் முத்துமாரியம்மாள்,செயல் அலுவலா் பாலமுருகன், அறங்காவலா்கள் ஜெகநாதன்,சுமதீந்திர பிரகாஷ், சுந்தர்ராஜ், கஸ்தூரி மற்றும் ஆலயப் பணியாளா்கள் செய்துள்ளனா்.