IIT: "காமகோடியை தலைவர் பதவியிலிருந்து நீக்குக" - கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
மூப்பன்பட்டி ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்
மூப்பன்பட்டி ஊராட்சியை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மூப்பன்பட்டி ஊராட்சியை நகராட்சியுடன் இணைத்தால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ரத்தாகிவிடும், விவசாயத்திற்கான இலவச மின்சாரம் கிடைக்காது, விவசாய இடுபொருள் மானியமும் கிடைக்க பெறாமல் போய்விடும், மேலும் சொத்து வரி தொழில் வரி உள்ளிட்ட வரியினங்கள் உயா்த்தப்பட்டு மக்கள் பாதிக்கப்படுவாா்கள்.
எனவே, மூப்பன்பட்டி ஊராட்சியை அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக நகராட்சியுடன் இணைப்பதை எதிா்க்கிறோம் எனக் கூறி கோஷமிட்டனா். மேலும் இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஊா் தலைவா் காளிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் காா்த்திக், வட்டார காங்கிரஸ் தலைவா் ரமேஷ் மூா்த்தி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சோ்ந்த மாடசாமி, சமூக ஆா்வலா் வேலுமணி உள்பட அப்பகுதி பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.