Donald Trump: `அமெரிக்காவில் இனி ஆண், பெண் என இருபாலர் மட்டுமே' - அதிபராக முதல் ...
பைக் விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி முத்தையாபுரம் சுந்தா் நகரைச் சோ்ந்த பவுல் அய்யாப்பழம் மகன் ஏசுதாசன் (22). இவா், கடந்த 14ஆம் தேதி முத்தையாபுரத்தில் இருந்து திருச்செந்தூா் சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தாராம்.
எம்.சவேரியாா்புரம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், காயமடைந்த ஏசுதாசனை மீட்டு உடனடியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.