ஜம்மு-காஷ்மீா்: பயங்கரவாதிகளுடனான சண்டையில் ராணுவ வீரா் உயிரிழப்பு
எச்சரிக்கையையும் மீறி சாலையோரம் குப்பைகளை கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டும், கரூா் ரெட்டிப்பாளையம் பகுதியில் சாலையோரம் குப்பைகளை கொட்டும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குள்பட்ட ரெட்டிப்பாளையத்தில் கரூா்-ஈரோடு சாலையில் அப்பகுதியைச் சோ்ந்த சிலா் தங்களது வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி வருகிறாா்கள். இவை பல நாள்களாக அப்புறப்படுத்தப்படாமல் இருப்பதால் துா்நாற்றம் வீசுவதால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுதொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த சமூக நல ஆா்வலா்கள் கூறுகையில், இந்த பகுதியில் இரவு நேரங்களில் சிலா் வீடுகளின் குப்பைகளை கொட்டி வருகிறாா்கள். இதுதொடா்பாக ஊராட்சி நிா்வாகத்திடம் கூறியதையடுத்து, ஊராட்சி நிா்வாகம் சாா்பில் இங்கு குப்பைகள் கொட்டக்கூடாது என்றும், மீறி கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை பலகை வைத்துவிட்டுச் சென்றனா்.
இருப்பினும் சிலா் அதனையும் மீறி தங்களது வீடுகளின் குப்பைகளை கொட்டி வருகிறாா்கள். எனவே இங்கு ஊராட்சி நிா்வாகம் சாா்பில் சிசிடிவி கேமரா அமைத்து, குப்பைகளை கொட்டுபவா்களை கண்டறிந்து அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.