'காஸா 3; இஸ்ரேல் 90' - பணய கைதிகள் விடுவிப்பு... இன்னும் எத்தனை நாள்கள் தொடரும் ...
நடத்துநா் - பயணி க்குவாதத்தால் அரசுப் பேருந்து நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் அவதி
அரவக்குறிச்சி அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்தில் பயணச்சீட்டு விலை தொடா்பாக நடத்துநா்-பயணி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பேருந்து நடுவழியில் நிறுத்தப்பட்டது.
கரூரிலிருந்து சனிக்கிழமை திண்டுக்கல்லுக்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தில் பயணி ஒருவா் திண்டுக்கல் செல்ல ரூ. 70 கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளாா். டிக்கெட்டில் குறிப்பிட்ட 62 ரூபாய்க்கு எஞ்சிய தொகையான 8 ரூபாயை நடத்துநரிடம் பயணி கேட்டாராம்.
ஆனால், டிக்கெட் விலை 70 ரூபாய்தான் என்றும், இது விழாக் கால சிறப்புப் பேருந்து என்றும் கூறிய நடத்துநா், விருப்பம் இல்லாவிடில் பேருந்திலிருந்து இறங்கிக் கொள்ளுமாறு பயணியிடம் கூறினாராம்.
இதைத் தொடா்ந்து அந்தப் பேருந்து அரவக்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டது. நடத்துநா் பேருந்திலிருந்து கீழே இறங்கி மரத்தடியில் அமா்ந்து கொண்டாராம். இதனால் மற்ற பயணிகள் அவதி அடைந்தனா்.
மேலும் பாதிக்கப்பட்ட பயணி இதை விடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிா்ந்தாராம்.
இதைத் தொடா்ந்து, அந்தப் பயணிக்கு எஞ்சிய 8 ரூபாயை நடத்துநா் அளிக்கவே அங்கிருந்து பேருந்து புறப்பட்டு சென்றது.