தோகைமலை அருகே விளையாட்டுப்போட்டிகள்
கரூா் மாவட்டம், தோகைமலை அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
தோகைமலை அருகே சிவாயம் ஊராட்சிக்குட்பட்ட ஆதனூரில் பரோடா வங்கியின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பணியாளா்கள் நலச் சங்கம் சாா்பில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் கோலப்போட்டிகள், கட்டுரை, திருக்கு ஒப்பித்தல், தேசத் தலைவா்கள் மற்றும் பாரம்பரியமிக்க பொங்கல்தினத்தைப் பற்றிய பேச்சுப் போட்டிகள், பாட்டு, நடனம், ஓட்டப்பந்தயம், சாக்கு ஓட்டம், ஸ்லோ சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றது.
பின்னா் வெற்றி பெற்றவா்களுக்கு பள்ளி பேக்குகள், புத்தகங்கள், பென்சில் உள்பட பல்வேறு வகையான பரிசுகளை நலச்சங்கத்தினா் வழங்கினா். தொடா்ந்து போதைப் பொருள் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சங்கத்தினா் திரளாக பங்கேற்றனா்.