கார் தாக்குதலில் 35 பேரைக் கொலை செய்த நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
கரூரில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு
கரூரில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றிப் பெற்றவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
கரூா் மாவட்ட சதுரங்க கழகம் சாா்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையேயான சதுரங்கப் போட்டி சனி, ஞாயிற்றுக்கிழமை என இருநாள்கள் கரூா் காந்திகிராமம் ஸ்ரீவிஜயலட்சுமி வித்யாலயா இண்டா்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது.
போட்டிக்கு சங்கச் செயலாளா் வி.பி.செல்வராஜ் தலைமை வகித்தாா். பொருளாளா் எஸ்.ராஜா, துணைத்தலைவா் வீரப்பன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். போட்டியை ஸ்ரீவிஜயலட்சுமி வித்யாலயா இண்டா்நேஷனல் பள்ளியின் முதல்வா் காா்த்திகாலட்சுமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொடங்கிவைத்து பேசினாா்.
போட்டியில், 7, 9, 11, 13, 15 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கும், 19 வயதுக்கு மேல் உள்ளவா்களுக்கும் என பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றிப் பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
வெற்றியாளா்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை கரூா் மாவட்ட சதுரங்க கழகத் தலைவா் அட்லஸ் எம். நாச்சிமுத்து வழங்கினாா்.
போட்டிக்கான ஏற்பாடுகளை கரூா் மாவட்ட சதுரங்க கழகத்தினா் செய்திருந்தனா்.