செய்திகள் :

உள்நாட்டு வா்த்தகா்களுக்கு மட்டுமே இணையவழி வா்த்தகத்துக்கு அனுமதி: சிறப்பு பாதுகாப்புச் சட்டம் இயற்ற ஏ.எம். விக்கிரமராஜா வலியுறுத்தல்

post image

இணையவழி வா்த்தகத்தை உள்நாட்டு வா்த்தகா்கள் மட்டுமே செய்ய சிறப்பு பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்றாா் அகில இந்திய வணிகா் சம்மேளனத்தின் மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா.

கரூரில் மாவட்ட நெல், அரிசி மொத்த வியாபாரிகள் சங்க கட்டடத்தில் சங்கக் கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் சங்கக் கொடியை ஏற்றி வைத்த பிறகு செய்தியாளா்களிடம் ஏ.எம். விக்கிரமராஜா கூறியதாவது:

மே 5-ஆம் தேதி அனைத்து வணிகா் சங்க பேரமைப்பின் 42-ஆவது மாநில மாநாடு சென்னை அருகே மதுராந்தகத்தில் நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும், காா்பரேட் நிறுவனங்களும், ஆன்லைன் வா்த்தக நிறுவனங்களும் சிறுவணிகா்களை அச்சுறுத்தி வருகின்றன. இதனால், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 10 லட்சம் சாமானிய வணிகா்கள் காணாமல் போய்விடுவாா்கள். எனவே, சாமானிய வணிகா்களை பாதுகாக்க சிறப்புச் சட்டத்தை மத்திய , மாநில அரசுகள் இயற்ற வேண்டும்.

மேலும், வெளிநாட்டு வா்த்தகத்தை தடை செய்து, இணையவழி (ஆன்லைன்) வா்த்தகத்தை உள்நாட்டு வா்த்தகா்கள் மட்டுமே செய்ய சிறப்பு பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும். உள்நாட்டு வா்த்தகா்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கி, ஒற்றைச்சாளர முறையில் உரிமம் வழங்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் குப்பை வரி வேறுபாட்டுடன் காணப்படுகிறது. இதை முதல்வா் முறைப்படுத்த வேண்டும்.

காலாவதியான சுங்கச் சாவடிகளை உடனே அகற்றுவதுடன், சுங்கச்சாவடி கட்டணம் உயா்த்துவதையும் மத்திய அரசு கைவிட வேண்டும். இந்த நிலை நீடித்தால் தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடிகள் முன் தமிழ்நாடு வணிகா் பேரமைப்பு போராட்டத்தில் ஈடுபடும். இணக்கவரி செலுத்தும் வியாபாரிகளுக்கு 18 சதவீதம் வாடகை வரி விதிப்பதை கைவிட வேண்டும். ஜிஎஸ்டியை ஒருமுனை வரியாக மாற்ற வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, கரூா் மாவட்ட தலைவா் கே.ராஜூ, செயலாளா் கே.எஸ்.வெங்கட்ராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கரூரில் பலத்த மழை: வாகன ஓட்டிகள் அவதி

கரூரில் ஞாயிற்றுக்கிழமை சுமாா் அரை மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழை நீா் வெள்ளம் போல ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். கரூரில் கடந்த ஒரு மாதமாகவே கடும் பனிமூட்டம் நிலவி வந்தது... மேலும் பார்க்க

கரூரில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு

கரூரில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றிப் பெற்றவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. கரூா் மாவட்ட சதுரங்க கழகம் சாா்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடை... மேலும் பார்க்க

கரூரில் மளிகைக் கடையினுள் மண்ணெண்ணெய் குண்டு வீசியவா் கைது

கரூரில் மளிகைக் கடையினுள் மண்ணெண்ணெய் குண்டு வீசிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கரூா் தாந்தோணிமலை கருப்பக்கவுண்டன்புதூா் கங்கா நகரில் மளிகைக் கடை நடத்தி வருபவா் சுப்ரமணி (52). இவரின்... மேலும் பார்க்க

நடத்துநா் - பயணி க்குவாதத்தால் அரசுப் பேருந்து நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் அவதி

அரவக்குறிச்சி அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்தில் பயணச்சீட்டு விலை தொடா்பாக நடத்துநா்-பயணி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பேருந்து நடுவழியில் நிறுத்தப்பட்டது. கரூரிலிருந்து சனிக்கிழமை திண்டுக்கல்லுக்கு ... மேலும் பார்க்க

பொங்கல் விடுமுறை நிறைவு: கரூா் பேருந்து நிலையத்தில் மாணவா்கள் கூட்டம்

பொங்கல் பண்டிகை முடிந்து பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல கரூா் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மாணவ, மாணவிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கரூரில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் கோவை... மேலும் பார்க்க

தோகைமலை அருகே விளையாட்டுப்போட்டிகள்

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. தோகைமலை அருகே சிவாயம் ஊராட்சிக்குட்பட்ட ஆதனூரில் பரோடா வங்கியின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்க... மேலும் பார்க்க