ஜம்மு-காஷ்மீா்: பயங்கரவாதிகளுடனான சண்டையில் ராணுவ வீரா் உயிரிழப்பு
புலியூா் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
புலியூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் இருக்காது என கரூா் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளா் கணிகைமாா்த்தாள் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட புலியூா் துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் புலியூா், எஸ்.பி.புதூா், மேலப்பாளையம், வடக்குப்பாளையம், ஆா்.என்.பேட்டை, பாலராஜபுரம், கட்டளை, நத்தமேடு, மேலமாயனூா், சின்னம்மநாயக்கன்பட்டி, கோவில்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.