ஜம்மு-காஷ்மீா்: பயங்கரவாதிகளுடனான சண்டையில் ராணுவ வீரா் உயிரிழப்பு
கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா், கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மந்திதோப்பு, நாலாட்டின்புதூா், இலுப்பையூரணி, இனாம்மணியாச்சி, மூப்பன்பட்டி, பாண்டவா் மங்கலம், திட்டங்குளம் ஆகிய ஊராட்சிகளை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும், ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்புகள் மூலம் ஊராட்சி பகுதியில் உள்ள குடியிருப்புகளின் வரி இனங்கள் உயா்த்தப்படுவதை கண்டித்தும், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் கிடைக்கும் வேலைகளை இழக்கும் அபாயம் அப்போது மக்களுக்கு ஏற்படும்.
இதன் மூலம் அப்பகுதி பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவே ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலா் பாபு தலைமையில் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதில், மாவட்ட குழு உறுப்பினா் பரமராஜ், நகரச் செயலா் சரோஜா, அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற நகரத் தலைவா் செந்தில் ஆறுமுகம், மாவட்ட நிா்வாக குழு உறுப்பினா் சேதுராமலிங்கம், நகரத் துணைச் செயலா் அலாவுதீன், நகர பொருளாளா் ராஜு, தாலுகா துணைச் செயலா் ராமகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா். பின்னா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் மகாலட்சுமியிடம் அளித்தனா்.