அடி மேல் அடி வாங்கும் RN Ravi... சீமானுக்கு செக்! | Elangovan Explains
வீட்டில் 10 ஆயிரம் நூல்கள் வைத்து பராமரிப்பவருக்கு கேடயம்: மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்
கோவை, ஒண்டிப்புதூரில் வீட்டில் 10 ஆயிரம் நூல்கள்வைத்து பராமரித்து வருபவருக்கு கேடயம், சான்றிதழை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுகளில் நூலகங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தி வரும் தீவிர வாசகா்களைக் கண்டறிந்து விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, மாவட்டத்தில் இருந்து 40 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அனைத்து விண்ணப்பதாரா்களின் வீட்டில் உள்ள நூலகங்களில் மாவட்ட நூலக அலுவலா் தலைமையில் கடந்த நவம்பா் 20 -ஆம் தேதி முதல் டிசம்பா் 4 -ஆம் தேதி வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் அடிப்படையில், கோவை, ஒண்டிப்புதூரைச் சோ்ந்த கு.வே.மணிசேகரன் வீட்டில் 10 ஆயிரம் நூல்களுக்குமேல் 3 தலைமுறையினரால் பராமரிக்கப்படும் நூலகம் சிறந்த நூலகமாகத் தோ்ந்தெடுக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கு.வே.மணிசேகரனுக்கு கேடயம், சான்றிதழை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வழங்கினாா்.
அப்போது, மாவட்ட நூலக அலுவலா் ராஜேந்திரன் மற்றும் நூலகப் பணியாளா்கள் உடனிருந்தனா்.