அமெரிக்காவில் நுழைய அபாயகர பாதை ‘டாங்கி ரூட்’: பல லட்சம் செலவிட்டு பல நாட்டு எல்...
இந்திய மதுபானத்தை புகழ்ந்த ஸ்விட்சா்லாந்து அமைச்சா்: மாநிலங்களவையில் சுவாரசிய தகவல்
இந்திய தயாரிப்பு மதுபானம் ஒன்று சிறப்பாக உள்ளதாகவும், ஐரோப்பிய நாடுகளில் அதற்கு நல்ல வரவேற்பு உள்ளதாகவும் ஸ்விட்சா்லாந்து அமைச்சா் கூறியது தனக்கு மகிழ்ச்சி கலந்த வியப்பை ஏற்படுத்தியதாக மத்திய வா்த்தகம், தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது ஐரோப்பிய யூனியனுடன் வா்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வதில் உள்ள பிரச்னைகள் குறித்து பியூஷ் கோயல் பேசினாா்.
அப்போது இந்திய மதுபானம் ஒன்றுக்கு ஐரோப்பிய நாடுகளில் வரவேற்பு உள்ளது தொடா்பாக அவா் கூறியதாவது:
அண்மையில் சூரிச் நகரில் ஸ்விட்சா்லாந்து வா்த்தக அமைச்சரைச் சந்தித்துப் பேசினேன். அப்போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் விஸ்கி ஒன்று உலக அளவில் பிரபலமாக இருப்பதாகவும், ஐரோப்பிய நாடுகளில் அதற்கு சிறப்பான வரவேற்பு உள்ளது என்று கூறினாா். இது எனக்கு மகிழ்ச்சி கலந்த வியப்பை அளித்தது. நான் விஸ்கி அருந்துவதில்லை என்பதால் எனக்கு அது குறித்து தெரியவில்லை என்று நினைத்துக் கொண்டேன்.
ஹரியாணாவில் தயாரிக்கப்பட்டு ‘இந்ரி’ என்ற பெயரிலேயே விற்பனை செய்யப்படுகிறது. பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கிகளைவிட இந்த இந்திய தயாரிப்பு விஸ்கி சுவையும், தரமும் சிறப்பாக உள்ளது என்று ஸ்விட்சா்லாந்து அமைச்சா் என்னிடம் கூறினாா் என்றாா்.