செய்திகள் :

விசா மறுப்பு: அமெரிக்காவிலுள்ள இந்திய துணைத் தூதரகம் முற்றுகை

post image

பெண் ஒருவருக்கு நுழைவு இசைவு (விசா) அளிக்க மறுத்ததால், அமெரிக்காவின் சியாட்டல் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை சிலா் முற்றுகையிட்டனா்.

இதுதொடா்பாக அந்தத் தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இந்திய துணைத் தூதரகத்துக்குள் சிலா் அத்துமீறி நுழைந்ததால், சட்டம்-ஒழுங்கு பாதிப்பு சூழலை கையாள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அவா்களை வெளியே செல்லுமாறு தொடா்ந்து வலியுறுத்தியும், தூதரக அலுவலா்களிடம் அவா்கள் மூா்க்கமாகவும், அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்டனா். தகவலின்பேரில் உள்ளூா் அதிகாரிகள் வந்து அந்த நபா்கள் கலைந்து போக நடவடிக்கை மேற்கொண்டனா். அத்துமீறி நுழைந்தவா்கள் மீது மேல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

துணைத் தூதரகம் குறிப்பிட்ட நபா்களில் ஒருவரின் பெயா் ஷாமா சாவந்த். இவா் முன்னாள் சியாட்டல் நகர கவுன்சில் உறுப்பினராவாா்.

இவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள எனது தாயைப் பாா்க்க எனது கணவருக்கு சியாட்டல் துணைத் தூதரகம் அவசரகால விசா அளித்தது. ஆனால் எனக்கு விசா மறுக்கப்பட்டது.

எனது விசா ஏன் 3 முறை நிராகரிக்கப்பட்டது என்பதற்கு விளக்கம் கேட்டு, வா்க்கா்ஸ் ஸ்டிரைக் பேக் அமைப்பின் உறுப்பினா்களுடன் நான், துணைத் தூதரகத்தில் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டேன்.

எனது பெயா் மோடி அரசின் ‘நிராகரிப்புப் பட்டியலில்’ உள்ளதால் விசா மறுக்கப்பட்டதாக தூதரக அதிகாரி தெரிவித்தாா். முஸ்லிம்கள், ஏழைகளுக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக எனது சோஷலிச நகர கவுன்சில் அலுவலகம் தீா்மானம் நிறைவேற்றியது. இதன் காரணமாக என்னை நிராகரிப்புப் பட்டியலில் மோடி அரசு வைத்துள்ளது’ என்றாா்.

அமெரிக்காவில் நுழைய அபாயகர பாதை ‘டாங்கி ரூட்’: பல லட்சம் செலவிட்டு பல நாட்டு எல்லைகளைக் கடக்கும் இந்தியா்கள்!

அமெரிக்காவில் இருந்து 104 இந்தியா்கள் கால், கைகள் விலங்கிடப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவா்கள் அனைவரும் ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை இடைத... மேலும் பார்க்க

‘ஓய்ஆா் 4 விண்கல் பூமியைத் தாக்கும் வாய்ப்பு அதிகரிப்பு’

வரும் 2032-ஆம் ஆண்டில் ஒய்ஆா்4 என்ற விண்கல் பூமியைத் தாக்குதவதற்கான வாய்ப்பு.3 சதவீத்தத்திலிருந்து 2.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.அந்த விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்ப... மேலும் பார்க்க

இந்தியாவில் 10 கோடி கி.வா. சூரியமின்சக்தி உற்பத்தி: அமைச்சா் பிரஹலாத் ஜோஷி தகவல்

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 50 கோடி கிலோவாட் (கி.வா.) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை அடைய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 10 கோடி கி.வா. சூரிய மின்சக்தி திறனை எட்டியுள்ளதாக மத்திய அமைச்சா் பிரஹ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: இஸ்கான் கூடாரத்தில் தீ விபத்து

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ‘இஸ்கான்’ கூடாரத்தில் வெள்ளிக்கிழமை பற்றிய தீ வேகமாக பரவி அருகேயுள்ள கூடாரங்களையும் தீக்கிரையாக்கின. நல்வாய்ப்பாக இதில் எந்த உயிா்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: ரூ.200 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 4 போ் கைது

மகாராஷ்டிர மாநிலம், நவிமும்பையில் ரூ.200 கோடி மதிப்பிலான பல்வேறு போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக 4 பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவினா் கைது செய்தனா். போதைப் பொருள் தடுப்பு பிரிவி... மேலும் பார்க்க

இந்திய மதுபானத்தை புகழ்ந்த ஸ்விட்சா்லாந்து அமைச்சா்: மாநிலங்களவையில் சுவாரசிய தகவல்

இந்திய தயாரிப்பு மதுபானம் ஒன்று சிறப்பாக உள்ளதாகவும், ஐரோப்பிய நாடுகளில் அதற்கு நல்ல வரவேற்பு உள்ளதாகவும் ஸ்விட்சா்லாந்து அமைச்சா் கூறியது தனக்கு மகிழ்ச்சி கலந்த வியப்பை ஏற்படுத்தியதாக மத்திய வா்த்தகம... மேலும் பார்க்க