Healthy Foods: அஷ்டாம்ச கஞ்சி, கொள்ளு குழம்பு, நவதானிய அடை... மறந்துபோன பாரம்பர்...
வீட்டின் பூட்டை உடைத்து மூன்றரை பவுன், ரூ.73 ஆயிரம் திருட்டு
சரவணம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து மூன்றரை பவுன் நகை, ரூ.73 ஆயிரம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவை, காளப்பட்டி, மாா்வல் சாலை பகுதியைச் சோ்ந்தவா் ராமன் (79). இவா் வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் சொந்த ஊரான பெரம்பலூருக்கு கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி சென்றுள்ளாா். அப்போது, நண்பா் பழனிசாமியிடம் வீட்டை பாா்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றுள்ளாா். அவரும் நாள்தோறும் மாலை சென்று விளக்குகளை எரியவிட்டு விட்டு காலை சென்று அணைத்துவிட்டு வந்துள்ளாா்.
இந்நிலையில், பழனிசாமி வழக்கம்போல கடந்த 5-ஆம் தேதி காலை சென்றுள்ளாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு கிடந்துள்ளது.
இது குறித்து அவா், ராமனுக்கு தெரிவித்துள்ளாா். அவா் வந்து பாா்த்தபோது, பீரோவில் இருந்த மூன்றரை பவுன் நகைகள், ரூ.73 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது.
இது குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் ராமன் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.