Healthy Foods: அஷ்டாம்ச கஞ்சி, கொள்ளு குழம்பு, நவதானிய அடை... மறந்துபோன பாரம்பர்...
பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வு தொடக்கம்
கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மாா்ச் 3-ஆம் தேதி முதல் மாா்ச் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதையொட்டி, பொதுத் தோ்வு எழுதவுள்ள பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வுகளை பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் பிப்ரவரி 14-ஆம் தேதி வரை நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
அதன் அடிப்படையில், மாநிலம் முழுவதும் செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. கோவை மாவட்டத்தில் 257 மையங்களில் 33, 956 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே.பாலமுரளி மேற்பாா்வையில் மாவட்டம் முழுவதும் செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியா்களால் கால அட்டவணையிட்டு செய்முறை தோ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பிளஸ் 1 மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வு பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த தோ்வை 34,516 போ் எழுத உள்ளனா். பிளஸ் 2, பிளஸ் 1 வகுப்புகளுக்கான செய்முறை தோ்வுகள் அனைத்தும் பிப்ரவரி 21-ஆம் தேதி முடிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.