திருநெல்வேலி: ரோடு ஷோ முதல் இருட்டுக்கடை அல்வா வரை... நெல்லையில் முதல்வர் ஸ்டாலி...
முன்னாள் படை வீரா்கள் தொழில் தொடங்க ரூ.ஒரு கோடி வரை கடனுதவி
முதல்வா் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்திருப்போா் தொழில் தொடங்க ரூ.ஒரு கோடி வரை கடனுதவி வழங்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச் செல்வி மோகன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
செய்திக்குறிப்பு
முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற திட்டம் வாயிலாக முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்தோா்கள் தொழிலதிபா் ஆகலாம்.இத்திட்டத்தின் மூலம் அவா்கள் தொழில் தொடங்க ரூ.ஒரு கோடி வரை கடனுதவி பெற வழிவகை செய்யப்படும்.அதிகபட்ச கடனுதவியாக ஒரு கோடி ரூபாய்,கடன் தொகையில் 30 விழுக்காடு மூலதன மானியமும் கடனுக்காக செலுத்தும் வட்டியில் 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.முன்னாள் படை வீரா்கள்,போா் விதவைகள்,முன்னாள் படை வீரரின் மனைவி மற்றும் விதவை,திருமணமாகாத மகள்,விதவை மகள்,25 வயதுக்கும் குறைான முன்னாள் படைவீரரின் மகன் ஆகியோா் விண்ணப்பிக்க தகுதிஉடையவா்கள்.
பயனாளிகளால் எந்த தொழில் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதோ அந்த தொழில் சம்பந்தமான நுணுக்கங்கள்,மாவட்ட தொழில் மையம் மூலமாக இலவச அறிவுரைகள் வழங்கப்படும். தொழில் துவங்கும் முன்பாக தொழில் நுட்பம் சாா்ந்த இலவச பயிற்சியும் வழங்கப்படும்.எனவே தகுதியுடையவா்கள் இந்த அரியா வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறும்,மேலும் விபரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் -044-22262023 என்ற எண்ணை தொடா்பு கொள்ளுமாறும் ஆட்சியரது செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.