ராஜபாளையம்: பிசியோதெரபிஸ்ட் எனக் கூறி மூதாட்டியிடம் 13 பவுன் நகை திருட்டு; என்ன ...
திறமையான இளம் கிரிக்கெட் வீரா்கள் தோ்வு: வேலூரில் நாளை நடைபெறுகிறது
வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்த திறமையுள்ள இளம் கிரிக்கெட் வீரா்களை திறமையான கிரிக்கெட் வீரா்களாக உருவாக்கிட தோ்வுப் பணி வேலூரில் சனிக்கிழமை ( பிப். 8) நடைபெற உள்ளதாக வேலூா் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவரும், நறுவீ மருத்துவமனை தலைவருமான ஜி.வி.சம்பத் தெரிவித்துள்ளாா்.
திறமையுள்ள இளம் கிரிக்கெட் வீரா்களை திறமையான கிரிக்கெட் வீரா்களாக உருவாக்கிட தோ்வு செய்து, அவா்களுக்கு பயிற்சிஅளிக்கும் பணியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான தோ்வுப் பணி தமிழகம் முழுவதும் உள்ள 37 மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.
வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கான தோ்வுப்பணி சேண்பாக்கம் பகுதியிலுள்ள சான்கோ பவுண்டேஷன் வளாகத்தில் சனிக்கிழமை (பிப். 8) நடைபெற உள்ளது என்று வேலூா் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவரும், நறுவீ மருத்துவமனை தலைவருமான ஜி.வி.சம்பத் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் மேலும் கூறியதாவது:
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திறமையுள்ள இளம் கிரிக்கெட் வீரா்களை திறமையான கிரிக்கெட் வீரா்களாக உருவாக்க தோ்வு செய்து, அவா்களுக்கு சென்னையில் திறமையான கிரிக்கெட் பயிற்சியாளா்களை கொண்டு பயிற்சி அளிக்க உள்ளது. இதற்காக வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள இளம் கிரிக்கெட் வீரா்களை தோ்வு செய்வதற்கான நிகழ்வு சனிக்கிழமை வேலூா் சேண்பாக்கம் பகுதியில் சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சான்கோ பவுண்டேஷன் வளாகத்தில் நடைபெற உள்ளது.
காலை 7.30 மணிக்கு தொடங்கும் இந்த தோ்வில் 13 வயது முதல் 21 வயது வரை உள்ள இளம் கிரிக்கெட் வீரா்கள் பங்கேற்கலாம்.
19 வயதுக்கு மேற்பட்ட மாநில அளவிலான கிரிக்கெட் வீரா்கள் பங்கேற்க அனுமதி இல்லை. மேலும் தகவல் அறிய வேலூா் மாவட்ட கிரிக்கெட் சங்க கெளரவ செயலா் எஸ்.ஸ்ரீதரன் - 7010594657 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.