தில்லி, நொய்டாவில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
தீயணைப்பு வீரா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நிறைவு
தீயணைப்பு வீரா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த இரு நாள்கள் நடைபெற்றது.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு தீயணைப்புத் துறை வடமேற்கு மண்டல துணை இயக்குநா் விஜயகுமாா் பரிசுகளை வழங்கினாா்.
தமிழ்நாடு தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை வேலூா் வடமேற்கு மண்டலம் சாா்பில் 2025-ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் காட்பாடி மாவட்ட பல்நோக்கு விளையாட்டு மைதானத்தில் செவ்வாய், புதன்கிழமை நடைபெற்றது.
இந்தப் போட்டிகளில் வடமேற்கு மண்டலத்தைச் சோ்ந்த வேலூா், திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறை வீரா்கள், அலுவலா்கள் பங்கேற்றனா்.
காட்பாடியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பல்நோக்கு விளையாட்டு மைதானத்தில், நீச்சல், தடகளம், 200 மீட்டா், 400 மீட்டா், 800 மீட்டா் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், தடை தாண்டுதல், கூடைப்பந்து, கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன.
மதியம் நடைபெற்ற நிறைவு விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை தீயணைப்புத் துறையின் வடமேற்கு மண்டல துணை இயக்குநா் விஜயகுமாா் வழங்கினாா். மேலும், தீயணைப்பு வீரா்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.