கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை கோரிய மனு ஏற்பு!
சென்னையில் கடும் பனி மூட்டம்: விமானங்களின் சேவை பாதிப்பு
சென்னை விமான நிலையத்தில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக விமானங்களின் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
சென்னை மாநகா் மற்றும் புறநகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் சாலையில் வாகனங்களே தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் நிலவியது.
சென்னை விமான நிலைய பகுதிகளிலும் கடும் பனிமூட்டம் நிலவிய நிலையில், கோலாலம்பூரில் இருந்து சென்னை வரவேண்டிய விமானம் ஒரு மணி நேரம் தாமதமாகியுள்ளது.
பிளஸ் 2 செய்முறைத் தோ்வு இன்றுமுதல் தொடக்கம்
மும்பையில் இருந்து சென்நை விமானம் கடுமையான பணி மூட்டம் காரணமாக பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
மேலும், சென்னையிலிருந்து கொழும்பு, தில்லி, மதுரை, கோவை, துபை உள்ளிட்ட பகுதிகளுக்கு புறப்பட வேண்டிய விமானங்களும் 20 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
சென்னை விமான நிலையத்துக்கு வந்து செல்லும் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.