செய்திகள் :

Trump: ``நெதன்யாகுவுக்கு 'கைது வாரண்ட்' தவறு" - சர்வதேச நீதிமன்றத்தையும் விட்டு வைக்காத ட்ரம்ப்

post image

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது தவறு என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை சாடியுள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை, அமெரிக்க அதிபர் ட்ரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.

இதன் பின்னர், நேற்று, "சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது தவறு. அதன்மூலம், நீதிமன்றம் தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளது. இந்த நீதிமன்றம் அமெரிக்கா மீதும், அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேல் மீதும் சட்டத்திற்கு புறம்பான, அடிப்படையற்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

சர்வதேச நீதிமன்றத்திற்கு ட்ரம்ப் விதித்த தடைகள் என்ன?

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு அமெரிக்காவில் எதாவது சொத்து இருந்தால், அது முடக்கப்படும். அவர்கள் அமெரிக்கா வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது" என்ற உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேல் - இரண்டு நாடுகளுமே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பினர்கள் அல்ல.

பாலஸ்தீனம் மீது போர் தொடுத்ததற்கும், அதற்கு அமெரிக்கா உதவியதற்கு குறிப்பிட்ட அந்த வழக்கு போடப்பட்டது. கடந்த நவம்பர் மாதம், நெதன்யாகுவுக்கு எதிரான கைது வாரண்ட் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

'பனாமா கால்வாய்க்கு குறிவைக்கும் ட்ரம்ப்' - சர்வதேச அரசியலில் என்ன நடக்கிறது?

ட்ரம்பின் பனாமா டார்கெட்இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றிருக்கும் ட்ரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக சமீபத்தில், "பனாமா கால்வாய் வழியாகச் பயணிக்கும்... மேலும் பார்க்க

``வரலாற்றை யாராலும் அழிக்க முடியாது... அது நிச்சியம் பழிவாங்கும்" - கண்ணீர்விட்ட ஷேக் ஹசீனா

வங்க தேசத்தில் மூன்றாவது முறை பிரதமராகப் பதவியேற்று ஆட்சியில் இருந்த ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு வங்கதேச மாணவர்களின் போராட்டத்தால் நாட்டைவிட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார். அதன்பிறகு பதவிநீக்கம் செய்... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "கலெக்டர் மறுப்பு தெரிவிக்க வேண்டும்; இல்லையென்றால்..." - ராஜன் செல்லப்பா காட்டம்

"அதிமுக குறித்து உண்மைக்குப் புறம்பாக அறிக்கை வெளியிட்டதற்கு மாவட்ட ஆட்சியர் மறுப்பு வெளியிட வேண்டும் இல்லையென்றால் நீதிமன்றத்தில்வழக்குத்தொடுப்போம்" என்று திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் ... மேலும் பார்க்க

திருநெல்வேலி: ரோடு ஷோ முதல் இருட்டுக்கடை அல்வா வரை... நெல்லையில் முதல்வர் ஸ்டாலின்... | Photo Album

திருநெல்வேலியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாட்கள் கட்சிக் கூட்டம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். ரோடு ஷோவில் மக்களைச் சந்தித்தார். புகழ் பெற்ற நெல்லை இருட்டு கடை அல்வா கடையில்... மேலும் பார்க்க

TVK : `ஒன்றிய அரசுடன் ஒரே நேர்கோட்டில் தமிழக ஆட்சியாளர்கள்..!" - சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி விஜய்

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், மாநில அரசு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனக் கூறி இருக்கிறார். சமீபத்தில் தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பெற்று அதுகுறித்த... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: `பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்; மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்' - அதிமுக அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே எட்டாம் வகுப்புப் படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தை உலுக்கியிருக்கிறது.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே அரசு நடுநிலைப் பள்ளிய... மேலும் பார்க்க