செய்திகள் :

சத்தீஸ்கரில் முன்னாள் கிராமத் தலைவர் வெட்டிக் கொலை!

post image

சத்தீஸ்கர் மாநிலம், தண்டேவாடா மாவட்டத்தில் வரவிருக்கும் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடும் முன்னார் சர்பஞ்ச் (கிராமத் தலைவர்) ஒருவரை நக்சல்கள் கொன்றதாக போலீஸார் தெரிவித்தனர்.

வியாழனன்று இரவு அரன்பூர் கிராமத்தில் உள்ள ஜோகா பார்சே (52) என்பவரின் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் முற்றுகையிட்டு, அவரது குடும்பத்தினர் முன்னிலையில் கோடரியால் வெட்டிக் கொன்றதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தகவல் அறிந்ததும், அரன்பூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து மாவோயிஸ்ட் துண்டுப்பிரசுரங்கள் எதுவும் மீட்கப்படவில்லை.

பாரா பகுதியில் வசிக்கும் ஜோகா பார்சே, முன்பு அரன்பூர் கிராம பஞ்சாயத்தின் தலைவராக பணியாற்றினார். அவரது மனைவி தற்போதைய கிராமத் தலைவராக உள்ளார்.

பஞ்சாயத்துத் தேர்தல் பிப். 17, 20 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும். இறந்தவர் பஞ்சாயத்துத் தேர்தலில் கிராமத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். தந்தேவாடா மாவட்டத்தில் மூன்று கட்டங்களாகப் பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெற உள்ளது.

பிஜாப்பூர் உள்பட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தர் பகுதியில் கடந்த ஆண்டு நக்சலைட் வன்முறையின் தனித்தனி சம்பவங்களில் 68 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மகா கும்பமேளா: 40 கோடியைத் தாண்டிய புனித நீராடிய பக்தர்கள்!

உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராடி பக்தர்களின் எண்ணிக்கை 40 கோடியைத் தாண்டியுள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களிடம் பாஜக பேரம்? கேஜரிவாலை விசாரிக்க வந்த ஊழல் தடுப்புப் பிரிவு!

ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்களிடம் பாஜகவினர் பேரம் பேசியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலை விசாரிக்க வந்த ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு அனுமதி மறுக்கப்பட்ட... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிகார் ஆளுநர்!

உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் பிகார் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் புனித நீராடினார். உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ரா... மேலும் பார்க்க

மகாராஷ்டிர தேர்தல்: 5 மாதத்தில் 39 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது எப்படி? ராகுல் கேள்வி

மகாராஷ்டிரத்தில் மக்களவைத் தேர்தலுக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இடையிலான 5 மாதங்களில் 39 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ள... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் உளவுத்துறை நடவடிக்கை: 12 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உளவுத்துறை சார்ந்த நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் 12 பயங்கரவாதிகளைக் கொன்றதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு வசிரிஸ்தானின் ஹசன் ... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் 3-வது முறையாக தீ விபத்து!

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் பிரம்மாண்டமாக நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் மூன்றாவது முறையாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.செக்டார் 18-ல் ஏற்பட்ட தீ விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று க... மேலும் பார்க்க