'மலக்குழி மரணம்; புகாரளிக்க சென்றவர்களை அலைக்கழித்த காவல்துறை' - சென்னை சூளைப்பள...
Kumbh Mela: அப்போ உலக அழகி, இப்போ சந்நியாசி... பாலிவுட் நடிகை இஷிகா தனேஜாவின் புது அவதாரம்!
உத்தரப்பிரதேசத்தில் நடந்து வரும் கும்பமேளாவில் தினமும் லட்சக்கணக்கானோர் பிரயக்ராஜ் நகர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
கும்பமேளாவில் சர்வதேச தலைவர்கள், முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் புனித நீராடியுள்ளனர். 25 ஆண்டுகள் இந்தியாவை விட்டு வெளிநாட்டில் தங்கி இருந்த பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி இந்த கும்பமேளாவில் தன்னைச் சந்நியாசியாக மாற்றிக்கொண்டுள்ளார். அவரைப் பின்பற்றி மற்றொரு நடிகையும் கும்பமேளாவில் சந்நியாசியாக மாறி இருக்கிறார். இஷிகா தனேஜா என்ற அந்த நடிகை 2017ம் ஆண்டு இந்து சர்க்கார் என்ற படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு டிவி சீரியஸ்கள், மியூசிக் ஆல்பம் போன்றவற்றில் நடித்துள்ளார்.
கும்பமேளாவின்போது அங்கு இஷிகா புனித நீராடுவதற்காக வந்தார். அங்கு அனைத்தையும் துறந்துவிட்டு இஷிகா சந்நியாசியாக மாறி இருக்கிறார். மெளனி அமாவாசையன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி தனது புதிய வாழ்க்கையைத் தொடங்கி இருப்பதாக இஷிகா தெரிவித்துள்ளார்.
இஷிகா அளித்த பேட்டியில், தான் சனாதன தர்மத்தைப் பரப்பப்போவதாகவும், இளம்பெண்கள் சனாதன பாதைக்குத் திரும்பவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். அதோடு மற்ற இளம் பெண்களையும் சனாதன வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்கப்போவதாக உறுதியளித்த இஷிகா, பெண்கள் சிறிய ஆடைகளை அணிந்து நடனமாடுவதற்காக அல்ல, மாறாகச் சனாதனத்திற்குச் சேவை செய்யவே உருவாக்கப்பட்டதாகக் கூறினார்.
விளம்பரத்திற்காக இது போன்று செய்கிறீர்களா என்றும், மீண்டும் பழைய வாழ்க்கைக்குத் திரும்புவீர்களா என்றும் கேட்டதற்கு, "ஒருபோதும் பழைய வாழ்க்கைக்குத் திரும்பமாட்டேன். வாய்ப்பு கிடைத்தால் படங்கள் தயாரிப்பேன். அதுவும் சனாதனத்தை விளம்பரப்படுத்தும் படங்களை மட்டுமே தயாரிப்பேன்" என்று தெரிவித்தார். முன்னதாக மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் சங்கராச்சாரியா சுவாமி சதானந்த் சரஸ்வதி வழிகாட்டுதலில் இஷிகா குரு தீட்ஷை பெற்றுக்கொண்டார்.
யார் இந்த இஷிகா?
2016 மற்றும் 2018ம் ஆண்டில் மிஸ் வேல்டு டூரிஸம் என்ற உலக அழகி பட்டத்தை வென்ற இஷிகா, 100 சாதனைப் பெண்கள் என்ற பிரிவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையால் விருதைப் பெற்றவர். அதோடு 60 நிமிடத்தில் 60 மாடல்களுக்கு மேக்கப் செய்து கொடுத்து கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறார். ஆனால் தற்போது சந்நியாசியாக மாறி இருக்கிறார்.
மற்றொரு நடிகை கும்பமேளாவில் புனித நீராடியதை வீடியோ எடுத்து வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். நடிகை காஜோல் சகோதரி தனிஷ்கா முகர்ஜி கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதை வீடியோ எடுத்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
அதனைப் பார்த்த நெட்டிசன்கள் தனிஷ்காவைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் புனித நீராடியது போல் தெரியவில்லை என்றும், படப்பிடிப்பு நடத்தியது போல் இருக்கிறது என்றும் நெட்டிசன்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர் சிவப்பு சேலை அணிந்து கொண்டு புனித நீராடியபோது அருகில் நின்ற ஒருவர் மேலும் ஒருமுறை மூழ்கி எழும்பும்படி கூறுகிறார். அதற்கு தனிஷ்கா அங்கு ஆழமாக இருக்கிறது என்று கூறுகிறார். அவர் தன்னை வீடியோ எடுக்கும் நபரிடம் பேசிக்கொண்டே புனித நீராடினார். இதனால் கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. கும்பமேளாவில் பாலிவுட் பிரபலங்களாக அனுபம் கெர், ஹேமாமாலினி, பூனம் பாண்டே, மம்தா குல்கர்னி, மிலிந்த் சோமன் உட்படப் பலர் புனித நீராடி இருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs