செய்திகள் :

2ஆம் நாள் முடிவு: இருவர் சதம், 73 ரன்கள் முன்னிலையில் ஆஸி.!

post image

இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் ஆஸி. அணி 73 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

காலே திடலில் நேற்று (பிப்.6) தொடங்கிய 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 257 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதைத் தொடர்ந்து விளையாடிவரும் ஆஸி. அணி முதல் இன்னிங்ஸில் 2ஆம் நாள் முடிவில் 330/3 ரன்கள் எடுத்துள்ளது.

ஏற்கனவே தொடரில் 1-0 என ஆஸி. முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இருவர் சதம்

ஆஸி. அணியில் தொடக்க வீரர்களில் ஹெட், பின்னர் வந்த லபுஷேன் சுமாரான தொடக்கம் அளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்து விளையாடிய ஸ்மித், கவாஜா ஓரளவுக்கு ரன்கள் குவித்தனர்.

கடந்த போட்டியில் இரட்டைச் சதமடித்த கவாஜா 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்மித், அலெக்ஸ் கேரி அற்புதமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். இருவரும் சதமடித்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார்கள்.

ஆஸி. ஸ்கோர் கார்டு

டிராவிஸ் ஹெட் - 21

உஸ்மான் கவாஜா - 36

மார்னஸ் லபுஷேன் - 4

ஸ்டீவ் ஸ்மித் -120*

அலெக்ஸ் கேரி - 139*

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இதனை கற்றுக் கொண்டேன்: ஷஃபாலி வர்மா

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் கற்றுக் கொண்ட விஷயம் குறித்து தில்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா பேசியுள்ளார்.மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணி இரண்டு முற... மேலும் பார்க்க

இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு நிரந்த இடமில்லாதது ஆச்சரியமளிக்கிறது: ரிக்கி பாண்டிங்

இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு நிரந்த இடமில்லாதது ஆச்சரியமளிப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வரு... மேலும் பார்க்க

பந்துவீச்சில் சந்தேகம்: அயர்லாந்து வீராங்கனை பந்துவீச தடை!

பந்துவீச்சில் சந்தேகத்தால் அயர்லாந்து வீராங்கனை பந்துவீச தடைவிதிக்கப்பட்டுள்ளது.அயர்லாந்து இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஐமீ மாகுய்ர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீசுவதற்கு தடைவிதிப்பதாக தெரி... மேலும் பார்க்க

அதிரடியாக சதமடித்த அலெக்ஸ் கேரி..! கட்டியணைத்த ஸ்டீவ் ஸ்மித்!

இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் அலெக்ஸ் கேரி சதம் அடித்தார். ஸ்டீவ் ஸ்மித் சதமடிக்கும்போது 79 ரன்களில் இருந்த அலெக்ஸ் கேரி தற்போது அதிரடியாக விளையாடி ஸ்மித்தை விடவும் அதிகமான ரன்களை அடித்துள... மேலும் பார்க்க

ஆசியாவில் அதிக சதங்கள்: 36-ஆவது சதமடித்த ஸ்டீவ் ஸ்மித்..!

டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 36ஆவது சதத்தினை நிறைவு செய்தார் ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித். இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் 191 பந்துகளில் பவுண்டரி அடித்து சதமடித்தார் ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். முன்னதாக... மேலும் பார்க்க

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட்: ஜிம்பாப்வே நிதான ஆட்டம்!

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளையின்போது, ஜிம்பாப்வே 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்துள்ளது.அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று (பிப்ரவரி... மேலும் பார்க்க