துணிவு படத்தைவிட குறைவாக வசூலித்த விடாமுயற்சி? ரசிகர்கள் அதிருப்தி!
தமிழக பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் போட்டி!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் புதுவை முதல்வருமான ரங்கசாமி அறிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 15 ஆம் ஆண்டு விழாவில் வெள்ளிக்கிழமை பேசிய ரங்கசாமி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்திலும் என்.ஆர். காங்கிரஸ் போட்டியிடும் என்று அறிவித்தார்.
மேலும், யாருடன் கூட்டணி என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் துன்புறுத்தல்! நடந்தது என்ன?
காங்கிரஸில் இருந்து விலகிய ரங்கசாமி, என்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை 2011ஆம் ஆண்டில் தொடங்கினார். அந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று முதல்வரானார்.
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 2021 -ல் பாஜகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றார்.
தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் முதல்வராக உள்ளார்.