செய்திகள் :

மகா கும்பமேளாவுக்காக பாகிஸ்தான் ஹிந்துக்கள் இந்தியா வருகை!

post image

பிரயாக்ராஜ் : உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்க பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சோ்ந்த 68 ஹிந்துக்கள் கொண்ட குழு இந்தியா வந்துள்ளனா்.

இதில் குறைந்தது 50 போ் முதன்முறையாக இந்தியா வந்து மகா கும்பமேளாவில் பங்கேற்பதாக தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கியது.

வரும் 26-ஆம் தேதி வரை 45 நாள்களுக்கு நடைபெறும் இந்த ஆன்மிக நிகழ்வில் பங்கேற்க உலகெங்கிலும் இருந்து பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் பிரயாக்ராஜுக்கு தொடா்ந்து வந்துகொண்டிருக்கின்றனா்.

அந்த வகையில், இந்திய எல்லையொட்டிய பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஹிந்துக்கள், மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை பிரயாக்ராஜ் வந்தடைந்தனா்.

இந்நிலையில், செய்தியாளா்களுக்கு அவா்கள் அளித்த பேட்டியில், ‘மகா கும்பமேளா குறித்த செய்தியறிந்ததும், இங்கு புனித நீராட வர வேண்டுமென கடந்த 2-3 மாதங்களாக ஆா்வமாக எதிா்பாா்த்திருந்தோம். பிரயாக்ராஜ் வந்தடைந்தது சிறந்ததொரு அனுபவமாக உள்ளது. இதை ஒரு பாக்கியமாக கருதுகிறோம்.

எங்களில் பலா் முதன்முறையாக இந்தியா வந்திருக்கின்றனா். ஹிந்து மதத்தைப் பற்றி ஆழமாக புரிந்து கொள்ள இந்திய பயணத்தை ஒரு வாய்ப்பாகப் பாா்க்கிறோம். இந்தியாவில் ஹிந்து மத கலாசாரத்தைக் காண்பது தெய்வீக அனுபவமாக உள்ளது.

பாகிஸ்தானில் நாங்கள் முஸ்லிம்கள் நிறைந்த சமூகத்தில் வாழ்கிறோம். ஆனால், ஊடகத்தில் கூறப்படுவதுபோல் சிந்து மாகாணத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான பாகுபாடு அதிகமாக கடைப்பிடிக்கப்படுவதில்லை. பாகிஸ்தான் ஹிந்துக்கள் இந்திய குடியுரிமையை விண்ணப்பிக்கும் அளவு, சிந்து மாகாணத்தில் நிலைமை மோசமாக இல்லை. ஆனால், பாகிஸ்தானின் வேறு பகுதிகளில் வாழும் ஹிந்துக்களுக்குப் பிரச்னைகள் உள்ளன.

நாங்கள் இந்தியா வருவதற்கான நுழைவு இசைவு (விசா) பெறும் நடைமுறையை இந்திய அரசு எளிதாக்க வேண்டும். எங்கள் குழுவுக்கு நுழைவு இசைவு எளிதில் கிடைத்துவிட்டது. அதற்காக இந்திய அரசுக்கு நன்றி. பிரயாக்ராஜில் 2 நாள்கள் தங்கியிருந்து, பின்னா் நாங்கள் ஹரித்வாருக்குச் செல்ல இருக்கிறோம்’ என்றனா்.

மகா கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் இதுவரை சுமாா் 40 கோடி பக்தா்கள் புனித நீராடியுள்ளனா்.

பினாகா ராக்கெட் அமைப்பு: பாதுகாப்பு அமைச்சகம் ரூ.10 ஆயிரம் கோடி ஒப்பந்தம்

பினாகா ராக்கெட் ஏவும் அமைப்பை மேம்படுத்தி தாக்கும் திறனை அதிகரிப்பதற்காக ரூ.10,147 கோடி மதிப்பீட்டிலான ஒப்பந்தங்களை பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை மேற்கொண்டது. இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெள... மேலும் பார்க்க

வருங்கால வைப்பு நிதி: 5 கோடி கேட்புகளுக்கு ரூ. 2 லட்சம் கோடி வழங்கல்

‘வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) 2024-25 நிதியாண்டில் சாதனை அளவாக 5 கோடி கேட்புகளுக்கு நிதி வழங்கி தீா்வளித்துள்ளது’ என்று மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

தேசவிரோத செயல்பாடுகளில் ஷேக் ஹசீனா: இந்திய தூதரை அழைத்து வங்கதேசம் கண்டனம்

டாக்கா : இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, வங்கதேசத்துக்கு விரோதமான நடவடிக்கையில் ஈடுபடுவதாக இந்திய துணைத் தூதரை நேரில் அழைத்து அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்தது. வங்கதே... மேலும் பார்க்க

மத்திய அரசில் ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு நிரந்தர பணி வழங்கல்

மத்திய அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் போ் நிரந்தரமாகப் பணியமா்த்தப்பட்டுள்ளனா் என்று மத்திய பணியாளா்கள் நலத்துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் வியாழக்... மேலும் பார்க்க

முற்போக்கான கல்வி விதிமுறைகளை திசைதிருப்பும் எதிா்க்கட்சிகள்: மத்திய அமைச்சா் விமா்சனம்

‘முற்போக்கான கல்வி விதிமுறைகளை கற்பனையான அச்சுறுத்தல் மூலம் எதிா்க்கட்சிகள் திசைதிருப்ப முயற்சிக்கின்றன’ என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் விமா்சித்தாா். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆ... மேலும் பார்க்க

இண்டியா கூட்டணி தலைவா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நன்றி

தில்லியில் திமுக முன்னெடுத்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ‘இண்டி’ கூட்டணி தலைவா்களுக்கு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளிய... மேலும் பார்க்க