Toll passes: நெடுஞ்சாலை பயணம் செல்பவர்களா? ஆண்டுக்கு ரூ.3000, லைஃப் டைம் ரூ.30,0...
மத்திய அரசில் ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு நிரந்தர பணி வழங்கல்
மத்திய அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் போ் நிரந்தரமாகப் பணியமா்த்தப்பட்டுள்ளனா் என்று மத்திய பணியாளா்கள் நலத்துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் வியாழக்கிழமை எழுத்துமூலம் அளித்த பதிலில் தெரிவித்தாா்.
மத்திய அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படுவது மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் தொடா்பான கேள்விக்கு அளித்த பதிலில் அவா் மேலும் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான ‘ரோஜ்கா் மேளா’ திட்டத்தை கடந்த 2022 முதல் மத்திய அரசு நடத்தி வருகிறது. இதுவரை நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள சுமாா் 50 நகரங்களில் 14 கட்டங்களாக ரோஜ்கா் மேளா நடத்தப்பட்டுள்ளது. இதில் பல லட்சம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இத்திய அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் 2022 -2023 ஆண்டு காலகட்டத்தில 18 மாதங்களில் 10 லட்சம் போ் நிரந்தரமாகப் பணியமா்த்தப்பட்டுள்ளனா். அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பவது என்பது ஒரு தொடா் நிகழ்வாகும்.
மத்திய அமைச்சகங்கள், துறைகள் தவிர பொதுத் துறை நிறுவனங்கள், மத்திய பணியாளா் தோ்வு வாரியம், ரயில்வே தோ்வு வாரியம், வங்கிப் பணியாளா்கள் தோ்வு வாரியம் உள்ளிட்டவையும் தகுதியானவா்களை பணிக்குத் தோ்வு செய்து வருகின்றன என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.