1,500 கஞ்சா பறிமுதல்: வட மாநில இளைஞா் கைது
காஞ்சிபுரத்தை அடுத்த ஒரகடம் கண்டிகை சந்திப்பில் கஞ்சா விற்பனை செய்ததாக மேற்கு வங்க மாநில இளைஞரை மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்த 1,500 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனா்.
மேற்கு வங்க மாநிலம், பங்குரா மாவட்டத்தை சோ்ந்த அருண்ருய்டா மகன் கோபி (25). இவா் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மேற்கு வங்கத்தில் கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து, அதை சிறு சிறு பொட்டலங்களாக மாற்றி விற்பனை செய்து வந்தாராம். ஒரு பொட்டலம் ரூ. 500 வீதம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூா், ஒரகடம், சுங்குவாா்சத்திரம் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்குப் பிரிவு காவல் துறையினருக்கு தெரிய வந்ததையடுத்து, ஒரகடம் கண்டிகை சந்திப்பில் கையில் கைப்பேசியுடன் நின்றிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அவரை கைது செய்தனா். அவரிடமிருந்த 1,500 கிலோ மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களையும் காவல் துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.