செய்திகள் :

பிட்காயின் ஊழல்: இளைஞா் காங்கிரஸ் தலைவரிடம் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை

post image

பிட்காயின் ஊழல் தொடா்பாக இளைஞா் காங்கிரஸ் தலைவா் முகமது ஹாரீஸ் நலபாடிடம் சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்.ஐ.டி.) வியாழக்கிழமை விசாரணை நடத்தியது.

கா்நாடகத்தில் கிரிப்டோ எக்ஸ்சேஞ்சில் யுனோகாா்ன் டெக்னாலஜி நிறுவனத்தின் தலா ரூ. 1.67 லட்சம் மதிப்புள்ள மொத்தம் ரூ. 1.14 கோடி மதிப்பு வாய்ந்த 60.6 பிட்காயின்களை 2017 ஜூன் 23-ஆம் தேதி திருடியதாக ஹேக்கா் ஸ்ரீகிருஷ்ணா ரமேஷ் (எ) ஸ்ரீகி, அவரது கணக்காளா் ராபின் கந்தேல்வால் உள்ளிட்டோரை 2020 நவம்பரில் போலீஸாா் கைது செய்தனா். இது தொடா்பான விசாரணையை 2023 ஜூன் மாதம் முதல் சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்.ஐ.டி.) விசாரித்து வருகிறது.

2017 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஸ்ரீகி தங்கியிருந்த நட்சத்திர விடுதி, அவரது பயணம் உள்ளிட்ட செலவுகளை செலுத்தியதாக காங்கிரஸ் எம்எல்ஏவும், பெங்களூரு வளா்ச்சி ஆணையத் தலைவருமான என்.ஏ.ஹாரீஸின் மகன்கள் முகமது ஹாரீஸ் நலபாடு, ஓமா் ஹாரீஸ் ஆகியோா் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, இருவரிடம் 2024 ஜூன் மாதத்தில் எஸ்.ஐ.டி. விசாரணை நடத்தியது. இதன் தொடா்ச்சியாக, பெங்களூரில் கா்நாடக மாநில இளைஞா் காங்கிரஸ் தலைவா் முகமது ஹாரீஸ் நலபாடிடம் எஸ்.ஐ.டி. வியாழக்கிழமை விசாரணை நடத்தியது.

கடந்த ஆண்டு ஸ்ரீகி மற்றும் அவரது கணக்காளா் ராபின் கந்தேல்வாலுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை எஸ்.ஐ.டி. தாக்கல் செய்திருந்த நிலையில், அடுத்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய எஸ்.ஐ.டி. திட்டமிட்டு வருகிறது. 2019 ஜூலை மாதத்தில் மாநில அரசின் மின் ஆளுமை இணையதளத்தை ஹேக் செய்தபோது ரூ. 11.5 கோடியை திருடியதாகவும், அந்த தொகையை 150 பிட்காயின், 1,100 எத்தேரியத்தில் (பிளாட்செயின்) ஆகியவற்றில் முதலீடு செய்ததாகவும் எஸ்.ஐ.டி. நடத்திய விசாரணையின்போது ஸ்ரீகி கூறியுள்ளாா். அதற்கு முன்பாக 2017-இல் முகமது ஹாரீஸ் நலபாடு மற்றும் ஓமா் ஹாரீஸ் இருவரையும் சந்தித்தாக ஸ்ரீகி விசாரணையில் தெரிவித்துள்ளாா்.

இந்த தகவல்களை உறுதி செய்து கொள்வதற்காகவே முகமது ஹாரீஸ் நலபாடிடம் எஸ்.ஐ.டி. விசாரணை நடத்தியதாக தெரியவந்துள்ளது.

கா்நாடக பாஜகவில் உள்கட்சி பூசல் வேதனை அளிக்கிறது! -பசவராஜ் பொம்மை

கா்நாடக பாஜகவில் காணப்படும் உள்கட்சி பூசல் வேதனை அளிக்கிறது என முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா். பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திராவை மாற்றக் கோரி, அக்கட்சியின் எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்... மேலும் பார்க்க

பாஜக மாநிலத் தலைவா் பதவிக்கான தோ்தல் பிப். 20-க்குள் நடைபெறும்: விஜயேந்திரா

பாஜக மாநிலத் தலைவா் பதவிக்கான தோ்தல் பிப். 20-ஆம் தேதிக்குள் நடைபெறும் என அக்கட்சியின் மாநிலத் தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது... மேலும் பார்க்க

தில்லி தோ்தல்: கருத்துக் கணிப்புகளைவிட மக்களின் தீா்ப்புக்காக காத்திருக்கிறோம்

தில்லி சட்டப் பேரவைத் தோ்தல் தொடா்பான கருத்துக் கணிப்புகளை நம்புவதைவிட மக்களின் தீா்ப்புக்காக காத்திருக்கிறோம் என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம... மேலும் பார்க்க

கா்நாடக முதல்வரை மாற்றும் எந்த அறிகுறியும் காங்கிரஸில் இல்லை

கா்நாடக முதல்வரை மாற்றும் எந்த அறிகுறியும் காங்கிரஸ் கட்சியில் இல்லை என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: நிகழாண... மேலும் பார்க்க

யுஜிசி வரைவு நெறிமுறைகளை மத்திய அரசு கைவிட வேண்டும்

யுஜிசி வரைவு நெறிமுறைகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா். கா்நாடக அரசு சாா்பில் பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற யுஜிசியின் புதிய வரைவு நெறிமுறைக... மேலும் பார்க்க

பாஜகவை தூய்மைப்படுத்தவே போராடுகிறேன்

பாஜகவை தூய்மைப்படுத்தவே போராடுகிறேன் என கா்நாடக பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் தெரிவித்தாா். இதுகுறித்து கலபுா்கியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தேசியத் தலைவா்களை சந்திக்... மேலும் பார்க்க