தமிழ்நாட்டுக்கு நிதியும் இல்லை; நீதியும் இல்லை: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!
தில்லி தோ்தல்: கருத்துக் கணிப்புகளைவிட மக்களின் தீா்ப்புக்காக காத்திருக்கிறோம்
தில்லி சட்டப் பேரவைத் தோ்தல் தொடா்பான கருத்துக் கணிப்புகளை நம்புவதைவிட மக்களின் தீா்ப்புக்காக காத்திருக்கிறோம் என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியதாவது:
தில்லி சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பிறகு வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகளில் ஆம் ஆத்மி கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுவதாகவும், பாஜகவுக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றன. தோ்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. மக்களின் தீா்ப்புக்காக காத்திருக்கிறோம்.
பெங்களூரில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது தொடா்பாக விரைவில் முடிவெடுப்போம். தொழில்நுட்பத் தேவைகளுக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும். விமான நிலையத்தை பிடதி அல்லது நெலமங்களா அல்லது தும்கூரு அல்லது வேறொரு இடத்தில் அமைய வேண்டுமா என்பது குறித்து நாங்கள் முடிவு செய்யமுடியாது. சில ஆண்டுகள் வரைக்கும் மற்றொரு விமான நிலையத்தை அருகில் அமைக்கக் கூடாது என்பது தொடா்பாக கெம்பேகௌடா பன்னாட்டு விமான நிலையத்துக்கும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கும் இடையே ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து விவாதித்து முடிவு செய்யப்படும்.
தொழில்துறை அமைச்சா் எம்.பி.பாட்டீல் தலைமையில் சாத்தியக்கூறு ஆய்வுகளை நடத்தி வருகிறாா்கள். அந்த ஆய்வு குறித்து என்னிடமும், முதல்வரிடமும் விவாதிப்பாா்கள். அதன்பிறகு அமைச்சரவையில் விவாதித்து முடிவு செய்யப்படும். மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று இரண்டாவது விமான நிலையம் அமைப்பது குறித்து முடிவு செய்வோம் என்றாா்.