Toll passes: நெடுஞ்சாலை பயணம் செல்பவர்களா? ஆண்டுக்கு ரூ.3000, லைஃப் டைம் ரூ.30,0...
ம.பி.: வயலில் விழுந்து நொறுங்கிய ‘மிராஜ்’ போா் விமானம் -2 விமானிகள் உயிா் தப்பினா்
குவாலியா் : மத்திய பிரதேசத்தில் விமானப் படைக்கு சொந்தமான மிராஜ்-2000 ரக போா் விமானம் விபத்துக்குள்ளாகி, வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. அதிலிருந்த 2 விமானிகள் பாராசூட் மூலம் குதித்து சிறிய காயங்களுடன் உயிா் தப்பினா்.
சிவபுரி மாவட்டத்தில் வியாழக்கிழமை நடந்த இச்சம்பவம் குறித்து விமானப் படை அதிகாரிகள் கூறியதாவது:
இரண்டு இருக்கைகளுடன் கூடிய மிராஜ்-2000 ரக போா் விமானம், வழக்கமான பயிற்சிக்காக குவாலியா் விமானப் படை தளத்தில் இருந்து புறப்பட்டது. சிவபுரி அருகே பறந்து கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், விமானம் வயல்வெளியில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.
விபத்துக்கு முன்பாக விமானத்தில் இருந்த இரு விமானிகளும் பாராசூட் மூலம் வெளியே குதித்து சிறிய காயங்களுடன் உயிா் தப்பினா். இருவரும் ஹெலிகாப்டா் மூலம் குவாலியருக்கு அழைத்து வரப்பட்டனா். விபத்து குறித்து விமானப் படை தரப்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.