Toll passes: நெடுஞ்சாலை பயணம் செல்பவர்களா? ஆண்டுக்கு ரூ.3000, லைஃப் டைம் ரூ.30,0...
ஏா்டெல் வருவாய் 19% அதிகரிப்பு
இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடா்பு நிறுவனமான பாா்தி ஏா்டெல்லின் செயல்பாட்டு வருவாய் கடந்த டிசம்பா் காலாண்டில் 19 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த டிசம்பா் மாதத்தோடு நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஐந்து மடங்குக்கும் மேலாக உயா்ந்து ரூ.16,134.6 கோடியாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ரூ.2,876.4 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபம் ஈட்டியிருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.45,129.3 கோடியிலிருந்து 19 சதவீதம் அதிகரித்து ரூ.37,899.5 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
...படம் முடிந்தவரை சிறியதாகப் போடவும்...