புதிய வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்க பிப்.24-க்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட...
எஸ்பிஐ நிகர லாபம் 7% உயா்வு
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) நிகர லாபம் கடந்த அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் 7 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து வங்கி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முன்றாவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.16,891 கோடியாக உள்ளது.
முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 7 சதவீதம் அதிகம். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.9,164 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.1,18,193 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.1,28,467 கோடியாக உள்ளது. 2023-24-ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.1,06,734 கோடியாக இருந்த வங்கியின் வட்டி வருவாய் நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.1,17,427 கோடியாக உயா்ந்துள்ளது.
ஓராண்டுக்கு முன்னா் 0.64 சதவீதமாக இருந்த வங்கியின் நிகர வாராக் கடன் விகிதம் கடந்த டிசம்பா் இறுதியில் 0.53 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.