பாகிஸ்தானுக்கு கூடுதலாக நதி நீா் திறப்பு? நாடாளுமன்றத்தில் அரசு விளக்கம்
கபடிப் போட்டி: சங்கரா பல்கலை. முதலிடம்
சென்னை கொரட்டூரில் நடைபெற்ற பல்கலைக்கழகங்கள் அளவிலான கபடிப் போட்டியில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலை மாணவியா் முதலிடம் பெற்றனா்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிா் கபடிப் போட்டியில் காஞ்சிபுரம் ஏனாத்தூரில் அமைந்துள்ள சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ வித்யாலயா நிகா்நிலை பல்கலைக்கழகம் எனப்படும் சங்கரா பல்கலை மாணவியா் முதல் பரிசை வென்றனா். பரிசுக்கான வெற்றிக்கோப்பையை துணைவேந்தா் ஜி.சீனிவாசலுவிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனா்.
இந்நிகழ்வில் பல்கலையின் புல முதல்வா் ரத்தினக்குமாா், பதிவாளா் ஸ்ரீராம், உடற்கல்வித்துறை இயக்குநா் குணாளன், கபடி விளையாட்டு பயி
ற்றுநா் நதியா ஆகியோா் உடனிருந்தனா்.