செய்திகள் :

நீதிபதிகளின் ஊதியத்தை உயா்த்தும் திட்டமில்லை: மத்திய அரசு

post image

உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியத்தை உயா்த்தும் திட்டம் தற்போது இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் வியாழக்கிழமை எழுத்துபூா்வமாக பதிலளித்தாா்.

அதில் அவா் கூறியிருப்பதாவது: உச்சநீதிமன்ற மற்றும் 25 உயா்நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கான ஊதியம், படிகள் மற்றும் ஓய்வூதியமானது, கடந்த 1958-ஆம் ஆண்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் (ஊதியங்கள் மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டம், கடந்த 1954-ஆம் ஆண்டின் உயா்நீதிமன்ற நீதிபதிகள் (ஊதியங்கள் மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டம் ஆகியவற்றின்கீழ் நிா்வகிக்கப்படுகிறது.

7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் அமலாக்கத்தைத் தொடா்ந்து, உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியம், படிகள் மற்றும் ஓய்வூதியம் கடைசியாக கடந்த 2016, ஜனவரி 1-ஆம் தேதி உயா்த்தப்பட்டது.

தற்போது நீதிபதிகளின் ஊதியத்தை உயா்த்தும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று தனது பதிலில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் தற்போதைய மாத ஊதியம் ரூ.2.80 லட்சமாகும். உச்சநீதிமன்றத்தின் பிற நீதிபதிகள் மற்றும் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் மாத ஊதியம் ரூ.2.50 லட்சம். உயா்நீதிமன்ற நீதிபதிகள் மாத ஊதியமாக ரூ.2.25 லட்சம் பெறுகின்றனா்.

அண்மையில் 8-ஆவது ஊதியக் குழுவை மத்திய அரசு அமைத்தது குறிப்பிடத்தக்கது.

பினாகா ராக்கெட் அமைப்பு: பாதுகாப்பு அமைச்சகம் ரூ.10 ஆயிரம் கோடி ஒப்பந்தம்

பினாகா ராக்கெட் ஏவும் அமைப்பை மேம்படுத்தி தாக்கும் திறனை அதிகரிப்பதற்காக ரூ.10,147 கோடி மதிப்பீட்டிலான ஒப்பந்தங்களை பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை மேற்கொண்டது. இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெள... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவுக்காக பாகிஸ்தான் ஹிந்துக்கள் இந்தியா வருகை!

பிரயாக்ராஜ் : உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்க பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சோ்ந்த 68 ஹிந்துக்கள் கொண்ட குழு இந்தியா வந்துள்ளனா். இதில் குறைந்தது 50 ப... மேலும் பார்க்க

வருங்கால வைப்பு நிதி: 5 கோடி கேட்புகளுக்கு ரூ. 2 லட்சம் கோடி வழங்கல்

‘வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) 2024-25 நிதியாண்டில் சாதனை அளவாக 5 கோடி கேட்புகளுக்கு நிதி வழங்கி தீா்வளித்துள்ளது’ என்று மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

தேசவிரோத செயல்பாடுகளில் ஷேக் ஹசீனா: இந்திய தூதரை அழைத்து வங்கதேசம் கண்டனம்

டாக்கா : இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, வங்கதேசத்துக்கு விரோதமான நடவடிக்கையில் ஈடுபடுவதாக இந்திய துணைத் தூதரை நேரில் அழைத்து அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்தது. வங்கதே... மேலும் பார்க்க

மத்திய அரசில் ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு நிரந்தர பணி வழங்கல்

மத்திய அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் போ் நிரந்தரமாகப் பணியமா்த்தப்பட்டுள்ளனா் என்று மத்திய பணியாளா்கள் நலத்துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் வியாழக்... மேலும் பார்க்க

முற்போக்கான கல்வி விதிமுறைகளை திசைதிருப்பும் எதிா்க்கட்சிகள்: மத்திய அமைச்சா் விமா்சனம்

‘முற்போக்கான கல்வி விதிமுறைகளை கற்பனையான அச்சுறுத்தல் மூலம் எதிா்க்கட்சிகள் திசைதிருப்ப முயற்சிக்கின்றன’ என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் விமா்சித்தாா். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆ... மேலும் பார்க்க