Toll passes: நெடுஞ்சாலை பயணம் செல்பவர்களா? ஆண்டுக்கு ரூ.3000, லைஃப் டைம் ரூ.30,0...
பாகிஸ்தானுக்கு கூடுதலாக நதி நீா் திறப்பு? நாடாளுமன்றத்தில் அரசு விளக்கம்
சட்லஜ், பியாஸ் நதிகளில் இருந்து பருவகாலத்தில் கூடுதலாக உள்ள நீா் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பகுதிக்குள் பாய்கிறது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இரு நாடுகள் இடையே 1960-இல் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீா் ஒப்பந்தப்படி சட்லஜ், பியாஸ், ராவி ஆகிய நதிகளின் நீா் இந்தியாவின் கட்டுப்பாட்டிலும், சிந்து, ஜீலம், செனாப் நதிகளின் நீா் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலும் உள்ளன.
இந்த நதி நீா் தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சா் ராஜ் பூஷண் சௌதரி மக்களவையில் வியாழக்கிழமை எழுத்துமூலம் பதிலளித்தாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:
சட்லஜ், பியாஸ் நதிகளில் இருந்து பாகிஸ்தானுக்கு நீா் திறக்கப்படுவது இல்லை. நீா் பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்வது, வெள்ளம், பருவ காலங்களில் மட்டும் உபரி நீா் பாகிஸ்தானுக்கு திறக்கப்படுகிறது. பெருமளவிலான நீா் நமது பயன்பாட்டுக்காக அணைகளில் தேக்கப்படுகிறது. அசாதாரண சூழ்நிலைகளில் மட்டும் அணை திறக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.