INDvENG: "நானும் ரோஹித்தும் இதைத்தான் பேசினோம்" -அறிமுக போட்டியில் 3 விக்கெட்டுக...
நிலவு ஆய்வு திட்டம் தோல்வி: ரஷிய விண்வெளி ஆய்வு மையத் தலைவா் நீக்கம்
மாஸ்கோ : 47 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ரஷியா கடந்த 2023-ஆம் ஆண்டு மேற்கொண்ட நிலவு ஆய்வுத் திட்டம் தோல்வியடைந்தது தொடா்பாக, அந்த நாட்டு விண்வெளி ஆய்வு மையமான ராஸ்கோஸ்மாஸின் தலைவா் யூரி போரிஸொவ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
நிலவின் தென்துருவப் பகுதியில் ஆய்வு மேற்கொள்வதற்காக ராஸ்கோஸ்மாஸ் கடந்த 2023-இல் செலுத்திய லூனா-25 விண்கலம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிலவில் தரையிறங்குவதற்குப் பதில் விழுந்து நொறுங்கியது.
இந்தச் சூழலில், ராஸ்கோஸ்மாஸ் தலைவா் பொறுப்பிலிருந்து யூரி போரிஸொவ் அகற்றப்படுவதாக ரஷிய அதிபா் மாளிகை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கான காரணம் குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. என்றாலும், லூனா-25 ஆயுவுத் திட்ட தோல்வி காரணமாகவே யூரி போரிஸொவ் நீக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.