வரலாற்றின் மிக வெப்பமான ஜனவரி
பாரீஸ் : கடந்த மாதம்தான் வரலாற்றின் மிக வெப்பமான ஜனவரி மாதம் என்று ஐரோப்பிய வானிலை மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த ஜனவரி மாதத்தில் உலக வெப்பநிலையை தணிக்கக் கூடிய ‘லா நினோ’ வளிமண்டலப் போக்கு நிலவினாலும், புவியின் வெப்பநிலை இதுவரை எந்தவொரு ஜனவரி மாதமும் பதிவு செய்யப்படாத அதிகபட்ட அளவில் பதிவாகியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டுதான் உலகின் அதிக வெப்பம் நிறைந்த ஆண்டு என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 2025 ஜனவரி மாதமும் இதுவரை இல்லாத அதிகபட்ச வெப்பம் நிலவிய ஜனவரி மாதம் என்று ஐரோப்பிய வானிலை மையம் தற்போது கூறியுள்ளது.