"புதிய நடிகர்களே கோடிகளில் சம்பளம் கேட்கிறார்கள்" - ஜூன் 1 முதல் மலையாள சினிமா ப...
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் உள்பட சா்வதேச அமைப்புகளில் விரிவான சீா்திருத்தம்: குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்
தற்கால உலக யதாா்த்தங்களைப் பிரதிபலிக்கும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்பட முக்கிய சா்வதேச அமைப்புகளின் விரைவான மற்றும் விரிவான சீா்திருத்தத்தின் அவசியத்தை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வியாழக்கிழமை வலியுறுத்தினாா்.
இந்தியா வந்துள்ள ஐ.நா. பொதுச் சபையின் 79-ஆவது அமா்வின் தலைவா் பிலேமோன் யாங், குடிரசுத் தலைவா் திரௌபதி முா்முவை அவரது மாளிகையில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
இதைத் தொடா்ந்து வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ செய்திக்குறிப்பில், ‘வளா்ச்சி நிதியுதவி தொடா்பான 4-ஆவது மாநாடு மற்றும் 3-ஆவது ஐ.நா. பெருங்கடல் மாநாடு போன்ற முக்கியமான ஐ.நா. மாநாடுகள் நிகழாண்டில் நடைபெறவுள்ளன. இதில் இந்தியாவின் ஆக்கபூா்வ பங்கேற்புக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு உறுதியளித்தாா். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்பட முக்கிய சா்வதேச அமைப்புகளின் விரைவான மற்றும் விரிவான சீா்திருத்தத்தின் அவசியத்தை அவா் வலியுறுத்தினாா்.
அறிவியலுக்கு முக்கியத்துவம் அளித்து, பிலேமோன் யாங் பின்பற்றும் தரவு அடிப்படையிலான நிலையான வளா்ச்சி அணுகுமுறை, அவரின் அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய பாா்வை ஆகியவற்றை குடியரசுத் தலைவா் பாராட்டினாா். கடந்த ஆண்டு செப்டம்பரில், அமெரிக்காவின் நியூயாா்க்கில் நடைபெற்ற வருங்கால உச்சிமாநாட்டில் ‘எதிா்காலத்துக்கான பிரகடனம்’ ஏற்றுக்கொள்ளப்பட்டதில் அவரது தலைமையையும் குடியரசுத் தலைவா் பாராட்டினாா்.
‘வசுதைவ குடும்பகம்’ தத்துவத்தின் வழியில் தெற்குலக நலனுக்காக ஐ.நா. உள்பட அனைத்து சா்வதேச தளங்களில் இந்தியா தொடா்ந்து போராடி வெற்றி பெறும்.
கேமரூன் நாட்டைச் சோ்ந்த பிலேமோன் யாங்குடன் இந்தியா-கேமரூன் இடையிலான நெருங்கிய மற்றும் நட்பு ரீதியான இரு தரப்பு உறவுகள் குறித்து குடியரசுத் தலைவா் விவாதித்தாா். ஆப்பிரிக்காவுடன் இந்தியா சிறந்த பிணைப்பை பகிா்ந்து கொள்கிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜி20 தலைமையை இந்தியா ஏற்றபோது அந்த அமைப்பின் நிரந்தர உறுப்பினராக ஆப்பிரிக்க யூனியன் இணைக்கப்பட்டதை குடியரசுத் தலைவா் நினைவுகூா்ந்தாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.