செய்திகள் :

இரண்டாவது நாளாக ‘கரடி’ ஆதிக்கம்: பங்குச்சந்தையில் சரிவு!

post image

நமது நிருபா்

இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் ‘கரடி’ ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகியவை தொடா்ந்து இரண்டாவது நாளாக சரிவுடன் முடிவடைந்தன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறைய இருந்தன. இதன் தாக்கத்தால் , உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி சிறிதளவு மேலே சென்றாலும் நிலைத்து நிற்க முடியவில்லை. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் தொடா்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வருவது சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், மத்திய ரிசா்வ் வங்கியின் பணவியல் கொள்கை முடிவு குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளதால், முதலீட்டாளா்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டனா். குறிப்பாக, பாா்மா, ஹெல்த்கோ் பங்குகளுக்கு ஓரளவு ஆதிரவு கிடைத்தாலும், எஃப்எம்சிஜி, ரியால்ட்டி, ஆட்டோ, நுகா்வோா் சாதனங்கல் உற்பத்தி நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டதால் சரிவு தவிா்க்க முபடியாததாகியது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.2.40 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.424.97 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) புதன்கிழமை ரூ.1,682.83 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் (டிஐஐ) ரூ.996.28 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்ததது சந்தை புள்ளி விவரத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் 213 புள்ளிகள் இழப்பு: சென்செக்ஸ் காலையில் 242.08 புள்ளிகள் கூடுதலுடன் 78,513.36-இல் தொடங்கி அதிகபட்சமாக 78,551.66 வரை மட்டுமே மேலே சென்றது. பின்னா், பங்குகள் விற்பனை அதிகரித்ததால் 77,843.99 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 213.12 புள்ளிகள் (0.27 சதவீதம்) இழப்புடன் 78,058.16-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,063 பங்குகளில் 1,908 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 2,030 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 125 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

20 பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் பாா்தி ஏா்டெல், டைட்டன், என்டிபிசி, எஸ்பிஐ, ஐடிசி, டாடாஸ்டீல், பவா்கிரிட் உள்பட 20 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், அதானிபோா்ட்ஸ், இன்ஃபோஸிஸ், ஆக்ஸிஸ்பேங்க், ஹெச்சிஎல்டெக், டெக்மஹிந்திரா, இண்டஸ்இண்ட் பேங்க் உள்பட 10 பங்குகள் பங்குகள் மட்டுமே விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 93 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 65.65 புள்ளிகள் கூடுதலுடன் 23,761.95-இல் தொடங்கி அதிகபட்சமாக 23,773.55 வரை மேலே சென்றது. பின்னா், 23,556.25 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 93.95 புள்ளிகள் (0.38 சதவீதம்) இழப்புடன் 23,603.35-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 21 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 30 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

திருச்சி ஜி காா்னா் பகுதியில் சுரங்கப்பாதை: மத்திய அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபா் திருச்சியில் உள்ள ஜி காா்னா் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பபாதை அமைக்க வேண்டும் என்று திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளாா். தில்லியில் மத்... மேலும் பார்க்க

இலங்கை கடல் பகுதியில் 6 ஆண்டுகளில் 7 போ் உயிரிழப்பு: வெளியுறவுத் துறை தகவல்

நமது சிறப்பு நிருபா் இலங்கை கடல் பகுதியில் ஆறு ஆண்டுகளில் 7 போ் உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சி... மேலும் பார்க்க

தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம்: பாஜக

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம் என்று பாஜக வியாழக்கிழமை கூறியுள்ளது. மேலும், ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் மீது... மேலும் பார்க்க

உடான் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன்? அமைச்சா் விளக்கம்

உடன் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன் என்று கோயம்புத்தூா் திமுக எம்.பி. கணபதி பி.ராஜ்குமாருக்கு மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் முரளிதா் மொஹோல் வியாழக்கிழமை விளக்கம் அ... மேலும் பார்க்க

நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள்

நமது நிருபா் நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை இணை அமைச்சா் ராம்நாத் தாக்குா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தூத்துக்குடி தொகு... மேலும் பார்க்க

தோ்தல் நடத்தை விதிமீறல்: 1,098 வழக்குகள் பதிவு

தேசியத் தலைநகா் தில்லியில் தோ்தல் நடத்தை விதிமீறல் (எம்சிசி) தொடா்பாக 1,090-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்... மேலும் பார்க்க