செய்திகள் :

``பல தலைமுறைகளாக இந்த பந்தம்..." -புன்னை நல்லூர் மாரியம்மனுக்கு சீர்வரிசை அளித்த இஸ்லாமியர்கள்!

post image

தஞ்சாவூரில் இருந்து ஐந்து கி.மீ தொலைவில் உள்ள புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. புன்னை மரக்காட்டில் மூலஸ்தான மகமாயியான மாரியம்மன் புற்று மண்ணால் உருவானதாக ஐதீகம். இதனால் மூலஸ்தான அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. மாறாக உற்சவ அம்மனுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தைல காப்பு அபிஷேகம் மட்டுமே நடைபெறுவது வழக்கம். இக்கோயில் தஞ்சாவூர் அரண்மனை தேஸ்தானத்தின் கீழ் உள்ள 88 கோவில்களில் ஒன்றாகும்.

சீர்வரிசை எடுத்த இஸ்லாமியர்கள்

இதன் குடமுழுக்கு கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்றது. அதன்பிறகு, குடமுழுக்கு நடத்த திட்டமிட்டு, அரண்மனை தேஸ்வதானம், அறநிலையத்துறை சார்பில், கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டது. இதையடுத்து பிப்ரவரி 10-ம் தேதி குடமுழுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் குடமுழுக்கிற்கான பூஜைகள் மற்றும் யாக சாலை பூஜைகள் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்றன. இதையடுத்து, 21 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெகு விமர்சையாக குடமுழுக்கு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றும் போது, `எங்களுக்கு எல்லாத்தையும் தரும் மகமாயி' என பக்தர்கள் கோஷமிட்டனர்.

குடமுழுக்கை முன்னிட்டு யாகசாலை பூஜைக்கு தேவையான பழங்கள், நெய், புடவை, ஜாக்கெட் பிட் உள்ளிட்ட பல பொருள்களை 51 தட்டில் இஸ்லாமியர்கள் சீர்வரிசை எடுத்து வந்தது முத்தாய்ப்பாகவும், மதநல்லிணக்கத்துக்கு எடுத்து காட்டாகவும் அமைந்தது. அப்பகுதியைச் சேர்ந்த இந்துக்கள், நாங்களும், இஸ்லாமியர்களும் மதங்களை கடந்து உறவுகளாக, சகோதர்களாக நகமும், சதையுமாக ஒன்றாக வாழ்ந்து வருகிறோம் என்றனர்.

குடமுழுக்கு விழாவில் சீர்வரிசை எடுத்த இஸ்லாமியர்கள்

இது குறித்து மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது, "மாரியம்மன் கோயில் பகுதியில் சுமார் 200 இஸ்லாமிய குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள இந்துக்களும், நாங்களும் தாயா, பிள்ளையா வாழ்ந்து வருகிறோம். கோயிலில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அதில் எங்களுடைய பங்களிப்பும் இருக்கும். பூச்சொரிதல் விழா நடக்கும் போதும் இதே போல் சீர் வரிசை எடுத்துச் செல்வோம். தற்போது குடமுழுக்கு விழாவிற்காக 51 தட்டுகளில் சீர்வரிசை பொருள்கள் எடுத்துச் சென்றோம். பல தலைமுறைகளாக இந்த பந்தம் தொடர்கிறது" என்றார்.

சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் கோயில் குடமுழுக்கு: 17 ஆண்டுகளுக்குப் பின் கோலாகலம்; குவிந்த பக்தர்கள்

தேனி மாவட்டம் சின்னமனூரில் கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பூலாநந்தீஸ்வரர் உடனுறை சிவகாமி அம்மன் கோயில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில் கட்டுமானத்துக்குச் சிவப்பு நிற பாறைகள் பயன்பட... மேலும் பார்க்க

தைப்பூசம்: பழநிக்கு படையெடுக்கும் முருக பக்தர்கள்... இன்று திருக்கல்யாணம்; நாளை தேரோட்டம்..!

தமிழகத்தில் முக்கியமான ஆன்மிகத் தலங்களில் ஒன்று மூன்றாம்படை வீடான பழநி முருகன் கோயில். இங்கு ஆண்தோறும் தைப்பூசம் விழா வெகுவிமர்சியாக நடைபெறுவது வழக்கம். இதையொட்டி பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்... மேலும் பார்க்க

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் தை கடைசி வெள்ளி திருவிழா -நேர்த்திக்கடனை நிறைவேற்றிய பக்தர்கள்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்றது. இந்த கோயிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். குறிப்பாக ... மேலும் பார்க்க

தோரணமலை தைப்பூசம்: உங்கள் வேண்டுதல்கள் யாவையும் நிறைவேற்றி வைக்கும் முருக வழிபாடு! சங்கல்பியுங்கள்

தோரணமலை தைப்பூசம்: உங்கள் வேண்டுதல்கள் யாவையும் நிறைவேற்றி வைக்கும் முருக வழிபாடு! சங்கல்பியுங்கள்! 2025 பிப்ரவரி 11-ம் நாள் செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள், சங்கல்ப பூஜைகள்... மேலும் பார்க்க

எல்லாப் பிணியும் நில்லாதோட... தோரணமலை தைப்பூசம்! விரும்பிய வாழ்க்கை உடனே அமைய சங்கல்பியுங்கள்!

எல்லாப் பிணியும் நில்லாதோட தோரணமலை தைப்பூசம்! விரும்பிய வாழ்க்கை உடனே அமைய சங்கல்பியுங்கள்! வரும் 2025 பிப்ரவரி 11-ம் நாள் செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள், சங்கல்ப பூஜைகள் ந... மேலும் பார்க்க

ரூ.6 கோடி மதிப்பு.. 6.8 கிலோ தங்கத்தில் கன்னியாகுமரி அம்மன் விக்கிரகம்- அர்ப்பணித்த கேரள தொழிலதிபர்!

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ள ஸ்ரீ பகவதி அம்மன் திருக்கோயில் வரலாற்று சிறப்பு வாய்ந்த திருத்தலமாகும். கன்னியாகுமரி பகவதி அம்மனின் ஒளிவீசும் மூக்குத்திக்கு என தனி முக்கியத்துவம் உ... மேலும் பார்க்க