கேரளாவை உலுக்கிய சாலை விபத்து - ஓராண்டுக்கு பிறகு கோவையில் சிக்கிய குற்றவாளி
கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே உள்ள வடகராவில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம், பேபி என்ற மூதாட்டியும் அவரின் 9 வயது பேத்தி த்ரிஷ்னாவும் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அந்த வழியே அதிவேகமாக வந்த ஒரு கார் அவர்கள் இருவர் மீதும் மோதி விபத்து ஏற்படுத்தியது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-09/5f236fcf-92a0-4c7c-a2df-f35ccd7f9b95/59fcd113_6dbc_4362_b8f5_d3df26267168.jpg)
அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பேபி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். படுகாயமடைந்த த்ரிஷ்னா கோமாவுக்கு சென்றுவிட்டார்.
கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அந்த கார் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்பத்தியது. விபத்தை ஏற்படுத்திய காரை கண்டறிய முடியாமல் கேரளா காவல்துறை திணறியது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-01/2f4ccb4e-c9fa-4a94-8228-9426ba3ed777/accident_1.jpg)
கேரளா உயர் நீதிமன்றம், மனித உரிமை ஆணையமும் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது. தொடர் அழுத்தங்கள் காரணமாக காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தியது. அதில் விபத்தை ஏற்படுத்திய நபர் ஷஜீல் என்பது தெரியவந்தது.
அவர் விபத்தை ஏற்படுத்தி விட்டு துபாய் தப்பி சென்றது தெரியவந்தது. காவல்துறை விசாரணைக்கு அழைத்தும் அவர் ஆஜராகமல் இருந்து வந்தார். இதனால் காவல்துறையினர் விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்திருந்தனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2020-08/c34ceb07-706a-406a-bfdc-aa24888ddde2/vikatan_2020_05_37fbc64d_e7a8_4ea7_8567_c2b9f98cca12_14.jpg)
இந்நிலையில், ஷஜின் இன்று அதிகாலை துபாயில் இருந்து கோவை விமான நிலையம் வந்தார். அப்போது அவரை குடியுரிமை பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து, கேரள காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Vikatan play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play