` மின்சாரம் துண்டிப்பு; சூரிய ஒளி வராத தனிச்சிறை' - உருக்கமான கடிதம் எழுதிய இம்ரான் கான்
ஊழல் வழக்கில் கைதாகி தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்.
Second Open Letter to the Chief of Army Staff by Former Prime Minister Imran Khan - February 8, 2025
— Imran Khan (@ImranKhanPTI) February 8, 2025
“I wrote an open letter to the Chief of Army Staff (you) with sincerity and in the best interest of the nation, aiming to bridge the widening gulf between the military and the…
அந்தக் கடிதத்தில், ``தற்போது ராணுவத்திற்கும், மக்களுக்கும் இடையே வளர்ந்து வரும் இடைவெளி தான் என்னை இந்தக் கடிதம் எழுதத் தூண்டியது.
நாட்டின் மிக முக்கியமான அமைப்பு ராணுவம். ஆனால், அதில் இருக்கும் சில கருப்பு ஆடுகளால் அதன் புகழ் பாதிப்படைகின்றது. அப்படியான ஒருவர் தான் அடியாலா சிறையில் இருக்கும் கர்னல். அவர் மனித உரிமைகளையும், அரசியலமைப்புகளையும் மீறி நடந்துகொள்கிறார். அவர் நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறுகிறார்.
அடியாலா சிறையில் முன்னாள் சூப்பிரண்டன்ட் சட்டத்தையும், விதிமுறைகளையும் பின்பற்றியதற்காகக் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டார். இப்போது ஒட்டுமொத்த சிறை அதிகாரிகளும் கர்னலால் மிரட்டப்பட்டுள்ளனர்.
நான் மரண தண்டனை செல்லில் உள்ள தனியறையில் 20 நாட்கள் வைக்கப்பட்டிருந்தேன். அங்கே சூரிய ஒளிக்கூட வராது. 5 நாட்களுக்கு என்னுடைய செல்லில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அந்த ஐந்து நாட்களும் முழுவதுமாக இருட்டில் தான் இருந்தேன்.
உடற்பயிற்சி கருவிகள், டிவி, செய்தித்தாள்கள் எதுவும் எனக்குக் கொடுக்கப்படவில்லை.
நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மாறாக, கடந்த ஆறு மாதங்களில் என்னுடைய மகன்களிடம் பேச மூன்று முறை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளேன். இது என்னுடைய அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாகும்.
நீண்ட தூரம் பயணம் செய்து என்னுடைய கட்சி உறுப்பினர்கள் என்னை பார்க்க வந்திருந்தார்கள். ஆனால், அவர்களை அனுமதிக்கவில்லை. ஆறு மாதங்களில், குறிப்பிட்ட சிலரை மட்டுமே பார்க்க அனுமதித்திருக்கிறார்கள். இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக, என்னை இன்னொரு சிறையில் இருக்கும் என் மனைவியைப் பார்க்க அனுமதிக்கவில்லை.
Extreme violence was unleashed on our unarmed pro-democracy supporters on May 9th (2023) and November 26th (2024). Peaceful civilians were directly shot at. Over the past three years, state security agencies have raided the homes of hundreds of thousands of our supporters,…
— Imran Khan (@ImranKhanPTI) February 8, 2025
என் மேல் இருக்கும் வழக்குகளை மிகுந்த அழுத்தம் கொண்டு முடிவு செய்ய வைக்கிறார்கள். நீதிபதிகளுக்கு அதிகம் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதனால் நீதிபதி ஒருவருக்கு ஐந்து முறை ரத்த அழுத்தம் எகிறிவிட்டது.
என்னையும், என் மனைவியையும் சிறையில் அடைக்கக் கொடுக்கப்படும் அழுத்தம் குறித்து நீதிபதியே என்னுடைய வழக்கறிஞரிடம் கூறியுள்ளார்" என்று தனது தனிப்பட்ட விஷயங்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கடிதம் எக்ஸ் தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.