ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு தீவிர சிகிச்சை
ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண் மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று அதிகாலை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கை, கால் உடைந்த நிலையில் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டது.
இதன்காரணமாக வேலூர் அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து கர்ப்பிணி பெண் மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதிகமான ரத்தம் தேவைப்பட இருப்பதால் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அதிமுக பலவீனம் அடையக் கூடாது: திருமாவளவன்
இந்த நிலையில் கர்ப்பிணி பெண்ணுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிய வந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் ஐ.சி.யூ.வில் உள்ளார். வயிற்றில் உயிரிழந்த 4 மாத சிசுவை அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் பெண்ணின் வலது கால் முட்டி, முதுகு தண்டுவடத்தில் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.