Ranveer Allahbadia: `உங்கள் பெற்றோர் உடலுறவு கொள்வதை..'- யூடியூபர் சர்ச்சை பேச்ச...
கஞ்சா, நாட்டுத் துப்பாக்கி பதுக்கிய விவசாயி கைது
நாமக்கல்: கொல்லிமலையில் கஞ்சா, நாட்டுத் துப்பாக்கி ஆகியவற்றை வைத்திருந்த விவசாயியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், வளப்பூா் நாடு பெரியகோயில் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லதுரை (41), விவசாயி. இவா் தனது நிலத்தில் வாழை பயிரிட்டுள்ளாா். அந்த தோட்டத்தில் கஞ்சா மற்றும் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக வாழவந்திநாடு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு சென்ற போலீஸாா், சுமாா் ஒரு கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களையும், நாட்டுத் துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனா். மேலும், விவசாயி செல்லத்துரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.